டேஸ்டியான அன்னாசி அல்வா செய்வது எப்படி?





டேஸ்டியான அன்னாசி அல்வா செய்வது எப்படி?

0
அடிக்கடி தலைவலி, ஒற்றை தலைவலிக்கு, விக்கல், தொடர் விக்கல், மூளை கோளாறு, செரிமான பிரச்சனை, மலசிக்கல், கீரைப்பூச்சி வெளியேற, மூட்டு வலி, பற்கள் 
டேஸ்டியான அன்னாசி அல்வா செய்வது எப்படி?
மற்றும் எலும்புகள் வலிமையாகும், கண் பார்வை தெளிவடைய, பித்தம், பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைநோய், தொண்டை கரகரப்பு, தொண்டை அழற்சி உடனடி, நிவாரணியாக செயல்படுகிறது. 

பித்தம் சம்பந்தமான வியாதிகள் குணமாக, அன்னாசிப்பழ வற்றல் சாப்பிட்டுவர நல்ல தீர்வு கிடைக்கும். 

குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடுவது இனிப்பு வகையான தின்பண்டங்கள், சாக்லேட், அதனால் வயிற்று வலி, கீரைப்பூச்சி போன்ற வயிறு சம்பந்தமான கோளாறுகள் அடிக்கடி ஏற்படும். 

இதனை சரிசெய்ய, அன்னாசிப்பழ இலையை மைய அரைத்து, ஒரு ஸ்பூன் அளவு அதன் சாறுடன் தேன் கலந்து குடுத்தால், வயிற்று போக்கு ஏற்பட்டு, வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியேறி விடும். 

சர்க்கரை நோயாளிகள், அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் இப்பழத்தை தவிர்ப்பது நல்லது. 

மேலும் கர்பிணி பெண்கள் கருவுற்ற ஆரம்ப காலத்தில் சாப்பிடுவதை தவிர்த்து, 8 மாதத்திற்கு மேல் சாப்பிட்டு வந்தால், சுகப்பிரசவம் ஆக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

நீங்கள் ரவை அல்வா, கேரட் ஹல்வா போன்றவற்றை சாப்பிட்டு மகிழ்ந்திருக்கலாம் ஆனால் இதோ உங்களுக்காக ஒரு தனித்துவமான வீட்டிலேயே தித்திக்கும் அன்னாசி அல்வா செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

தேவையானவை

அன்னாச்சிப் பழத்துண்டுகள் - 1 கப்

பால் - 1 கப்

சர்க்கரை - 1 கப்

ஏலப்பொடி - 1/2 தே‌க்கர‌ண்டி

உப்பு - 1 சிட்டிகை

நெய் - 3/4 கப்

கேசரிப் பவுடர் - 1/4 தே‌க்கர‌ண்டி

தண்ணீர் - 1/4 டம்ளர்

செய்முறை :
அன்னாசி அல்வா
முதலில் அன்னாசிப்பழத் துண்டு களை ஆவியில் வேக வைக்கவும். ஆறியபின் பால் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். தண்ணீர் ஊற்றி, சர்க்கரை சேர்த்து கம்பிப்பதம் வரும் வரை காய்ச்சுங்கள்.

இதில், அரைத்து வைத்துள்ள விழுது, ஒரு சிட்டிகை உப்பு, நெய், ஏலப்பொடி, கேசரிபவுடர், நெய்யில் வறுத்த திராட்டை ஆகியவை சேர்த்து அல்வாப் பதம் வரும் வரை கிளறி இறக்கவும். 

அன்னாச்சிப்பழ ஜூஸ் எடுத்து தண்ணீருக்குப் பதில் ஜூஸை ஊற்றி, இதே முறையில் அல்வா தயார் செய்யலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)