ஸ்வீட் கார்ன் அல்வா செய்வது எப்படி?

ஸ்வீட் கார்ன் அல்வா செய்வது எப்படி?

0
ஸ்வீட் கார்ன் யாருக்குத் தான் பிடிக்காது. இப்போதெல்லாம் பீட்சா, பாஸ்தா, பர்கர் முதல் சாலட் வரை சுவையை அதிகரிக்க ஸ்வீட் கார்ன் தான் பயன்படுத்தப் படுகிறது. 
ஸ்வீட் கார்ன் அல்வா
ஆனால் ஸ்வீட் கார்ன் அதன் சுவைக்கு மட்டுமல்ல, அற்புதமான நன்மைகளையும் கொண்டுள்ளது. சோளத்தில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. 

அவை உடலுக்கு பல நன்மைகளை வழங்குவதில் பயனுள்ளதாக இருக்கும். இது செல் உருவாக்கத்தில் தொடங்கி உடலின் அனைத்து முக்கிய செயல்முறைகளையும் ஊக்குவிக்கிறது.

ஸ்வீட் கார்னில் கரையாத நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது. வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளிலும் ஸ்வீட் கார்ன் மிகவும் நன்மை பயக்கும். 

ஸ்வீட் கார்னில் உள்ள வைட்டமின் பி புரதம், லிப்பிட், கார்போஹைட்ரேட், வளர்சிதை மாற்றம் மற்றும் பைட்டோ கெமிக்கல்களை ஒழுங்கு படுத்துவதன் மூலம் இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கிறது. 

ஸ்வீட் கார்னில் கிளைசெமிக் இண்டெக்ஸ் மிகக் குறைவு. எனவே இது நீரிழிவு நோய்க்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

நீங்கள் ரவை அல்வா, கேரட் ஹல்வா போன்றவற்றை சாப்பிட்டு மகிழ்ந்திருக்கலாம் ஆனால் இதோ உங்களுக்காக ஒரு தனித்துவமான வீட்டிலேயே செய்யலாம் ஸ்வீட் கார்ன் அல்வா.

தேவையானவை

மக்காச் சோள மாவு – 1 கப்

தண்ணீர் – 3 கப்

சர்க்கரை – 2 கப்

எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்

ஏலக்காய்ப் பொடி – 1 டீஸ்பூன்

நெய் – 1 டீஸ்பூன்

முந்திரி – 1 டீஸ்பூன்

திராட்சை – 1 டீஸ்பூன்

கேசரி பவுடர் – தேவையான அளவு

செய்முறை :

முதலில் மக்காச் சோள மாவுடன் 11/2 கப் தண்ணீர் சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ளவும். வாணலியை சூடாக்கி சர்க்கரை மீதமுள்ள தண்ணீர் சேர்க்கவும். 

பாகு பதத்தில் வந்தவுடன், சோள மாவினை சேர்த்துக் கிளறி விடவும். இதனை கிளறிக் கொண்டோ முந்திரி, திராட்சை, கேசரி பவுடர், நெய், எலுமிச்சைச் சாறு, ஏலக்காய்ப் பொடி சேர்த்து கிளறவும்.

இந்தக் கலவை உருண்டு திரண்டு வரும் போது, இதனை ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டவும். 

முந்திரியால் அதன் மேல் அலங்கரித்து, ஆறியதும் நமக்கு விருப்பமான வடிவங் களில் வெட்டிக் கொள்ளவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)