முருங்கைக்கீரைப் பொரியல் செய்முறை / Drumstick Frying Recipe !





முருங்கைக்கீரைப் பொரியல் செய்முறை / Drumstick Frying Recipe !

0
தேவையானவை:

ஆய்ந்து எடுத்த முருங்கைக் கீரை – 250 கிராம்,

தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன்,

ஊற வைத்த பாசிப்பருப்பு – 4 டீஸ்பூன்,

கடுகு – கால் டீஸ்பூன்,

மிளகாய் வற்றல் – ஒன்று,

பெருங்காயத் தூள், எண்ணெய் – சிறிதளவு,

உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
முருங்கைக்கீரைப் பொரியல்
முருங்கைக் கீரையைப் பாசிப் பருப்பு சேர்த்து வேக வைத்து தண்ணீரை வடி கட்டவும். 

கடாயில் எண்ணெய் விட்டு… கடுகு, மிளகாய் வற்றல் போட்டு தாளித்து, 

வெந்த கீரையை பிழிந்து போட்டு, தேங்காய் துருவல், பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

குறிப்பு:

முருங்கைக் கீரையில் அடை, வடை, கூட்டு என்று பல விதமாக தயாரிக்க லாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)