சுவையான ஜவ்வரிசி உப்புமா செய்வது எப்படி?

சுவையான ஜவ்வரிசி உப்புமா செய்வது எப்படி?

0
பொதுவாக விரதம் இருக்கும் போது எடுத்து கொள்ளும் உணவு வகைகளில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை பல வகை உணவு தயாரிப்பின் போது பயன்படுத்தப்படுகிறது. 
சுவையான ஜவ்வரிசி உப்புமா செய்வது எப்படி?
இனிப்பு மற்றும் காரம் என இரண்டு வகையான பலகாரங்களிலும் இது சேர்க்கப்படுகிறது. மேலும் அனைவராலும் ரசித்து ருசித்து உண்ணப்படும் பொருளாகவும் இது விளங்குகிறது. 

ஜவ்வரிசி உப்புமா என்றால் யாருக்காவது எச்சில் ஊறாமல் இருக்குமா? ஆம், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பார்கள். 

ஜவ்வரிசியில் அதிக அளவில் கார்போஹைட்ரேட் மற்றும் குறைந்த அளவில் கொழுப்பு உள்ளது. ஆகவே எடை மீது அதிக அக்கறை உள்ளவர்கள் இதனை பயன்படுத்தலாம். 
ஸ்டார்ச்சால் நிறைந்துள்ள ஜவ்வரிசியில் செயற்கை இனிப்பு மற்றும் ரசாயனங்கள் என எதுவும் இல்லாததால், இதனை பரவலாக அனைவரும் விரும்புகின்றனர்.

சரி இனி ஜவ்வரிசி கொண்டு சுவையான ஜவ்வரிசி உப்புமா செய்வது எப்படி? என்று பார்ப்போம். 
தேவையானவை:

ஜவ்வரிசி - 100 கிராம்,

பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப்,  

கேரட் துருவல் - ஒரு கப், 

வறுத்த வேர்க்கடலை - ஒரு கப்,

பச்சை மிளகாய் - 1,

துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்,

உப்பு - தேவையான அளவு,

பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன், 

கொத்த மல்லி - சிறிதளவு,

விருப்பப் பட்டால் நெய் - 1 டீஸ்பூன்,

எலுமிச்சம் பழம் - அரை மூடி. 
செய்முறை:
சுவையான ஜவ்வரிசி உப்புமா செய்வது எப்படி?
ஜவ்வரிசியை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு, ஒரு மணி நேரம் ஊற விடவும்.

கடாயில் நெய் விட்டு, கடுகு, பச்சை மிளகாய் நறுக்கிப் போட்டு வெங்காயம், பொட்டுக் கடலை, இஞ்சி, கேரட் துருவல், வேர்க்கடலை எல்லா வற்றையும் சேர்த்து, ஊறிய ஜவ்வரிசியை யும் சேர்த்துக் கிளறவும்.
உப்பு சேர்த்துக் கிளறி ஜவ்வரிசி வெந்ததும் நறுக்கிய கொத்து மல்லி எலுமிச்சம் பழச்சாறு கலந்து நன்றாகக் கிளறி இறக்கவும். 
வெங்காயச் சட்னி:

கடாயில் சிறிது எண்ணெய் விட்டு 10 சின்ன வெங்காய த்தைத் தோல் உரித்துச் சேர்த்து வதக்கவும்.

2 காய்ந்த மிளகாய், 2 டீஸ்பூன் கடலைப் பருப்பு சேர்த்து வறுத்து, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். கடுகு தாளித்து நன்றாகக் கலக்கவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)