தினைப் பாயசம் செய்முறை | Millet Flour Recipe !





தினைப் பாயசம் செய்முறை | Millet Flour Recipe !

0
சிறு தானியங்களை உண்ணும் பொழுது நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு. சிறு தானியங்களில் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, 
தினைப் பாயசம்

அத்தியாவசிய வைட்டமின்கள், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற மினரல்களும் அடங்கியுள்ளன.

இதனால் சிறுதானிய உணவு வகைகள் உண்பதால் உடல் ஆரோக்கிய மாகவும் இருக்கும்.

தேவையானவை:

தினை அரிசி – 1 கப்

பனை வெல்லம் – 3/4 கப்

பால் – 1 கப்

முந்திரிப் பருப்பு – 5

ஏலக்காய்த் தூள் – சிறிதளவு

உலர்ந்த திராட்சை – 5

நெய் – 2 தேக்கரண்டி

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் விட்டு அதில் தினையைச் சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.

அரிசி நன்றாக வெந்த பின், வெல்லத்தைத் தூளாக்கிப் போடவும். 

10 நிமிடம் அதை வேக விட்டு, பால் சேர்க்கவும். முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து, அதில் சேர்க்கவும்.

கடைசியாக, ஒரு கலக்குக் கலக்கி இறக்கும் போது, ஏலக்காய்த் தூள் போட்டு இறக்கி, சூடாகப் பரிமாறவும்.

குறிப்பு:

இனிப்பில் ஏலக்காயைக் கடைசியாகப் போடுவது வெறும் வாசத்துக்கு மட்டும் அல்ல. சளி பிடிக்கும் தன்மையையும், செரிக்கத் தாமதிக்கும் மந்தத் தன்மையையும் ஏலக்காய் பொடி சரி செய்யும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)