பீ ஹூன் (ரைஸ் நூடுல்ஸ்) செய்முறை | Pee Hoon (Rise Noodles) Recipe !





பீ ஹூன் (ரைஸ் நூடுல்ஸ்) செய்முறை | Pee Hoon (Rise Noodles) Recipe !

தேவையானவை:

ரைஸ் நூடுல்ஸ் – 100 கிராம்,

டோஃபு – 6 சிறிய துண்டுகள்,

பெரிய வெங்காயம் – ஒன்று,

பீன்ஸ் ஸ்பிரவுட் (முளைகட்டிய பீன்ஸ்) – அரை கப்,

கடுகுக் கீரை – 2 கொத்து,

நீளவாக்கில் மெலிதாக நறுக்கிய முட்டைகோஸ், கேரட் – கால் கப்,

பூண்டு – 2 பல்,

பச்சை மிளகாய் – 2,

சோயா சாஸ் – ஒரு டேபிள் ஸ்பூன்,

சில்லி பேஸ்ட் – ஒன்றரை டீஸ்பூன்,

முட்டை – ஒன்று (விரும்பினால்),

எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்,

உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:
பீ ஹூன் (ரைஸ் நூடுல்ஸ்)
ஒரு பாத்திரத்தில் நூடுல்ஸ், 2 டீஸ்பூன் உப்பு சேர்த்து நூடுல்ஸ் மூழ்கும் அளவுக்கு கொதிக்கும் சூட்டில் வெந்நீர் சேர்த்து, 2 நிமிடத்தில் வடிகட்டவும் (குழைந்து விடாமல்).

தோல் உரித்த பூண்டு, பச்சை மிளகாயைத் தட்டவும். பெரிய வெங்காய த்தைப் பொடியாக நறுக்கவும். 

டோஃபு ஒரு இன்ச் அளவு சதுரத் துண்டாக இருக்க வேண்டும். கடுகுக் கீரையை கழுவி, நறுக்கவும்.

அகன்ற வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும் முதலில் டோஃபு துண்டுகளைச் சேர்த்து லேசான பொன்னிறத்தில் வறுத்து எடுக்கவும். 

அதே எண்ணெயில் தட்டிய பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, நறுக்கிய பெரிய வெங்காயம், முட்டைகோஸ், கேரட் சேர்த்து வதக்கவும்.

பிறகு சில்லி பேஸ்ட், சோயா சாஸ் சேர்த்து நன்கு கிளறி, முட்டையை உடைத்து ஊற்றி நன்கு பிரட்டி விடவும். 

பின்பு முளை கட்டிய பீன்ஸ் மற்றும் நறுக்கிய கீரையைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, நூடுல்ஸை சேர்த்து நன்கு ஒன்று சேரப் புரட்டவும். 

செட் ஆனதும் இறக்கவும். வறுத்த டோஃபு துண்டுகளைச் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.
Tags: