மல்ட்டி கிரெய்ன்ஸ் பொடி செய்வது எப்படி? | Multi Cereals Flour !





மல்ட்டி கிரெய்ன்ஸ் பொடி செய்வது எப்படி? | Multi Cereals Flour !

தேவையானவை:

பச்சைப்பயறு – கால் கப்,

வேர்க்கடலை – கால் கப்,

கறுப்பு உளுந்து – கால் கப்,

வெள்ளை சோளம் – கால் கப்,

கடலைப் பருப்பு – கால் கப்,

பச்சரிசி, புழுங்கல் அரிசி – கால் கப்,

காய்ந்த மிளகாய் – 8,

பெருங்காயத் தூள் – அரை டீஸ்பூன்,

எண்ணெய், உப்பு – தேவையான அளவு,

செய்முறை:
மல்ட்டி கிரெய்ன்ஸ் பொடி

தானிய வகைகளை வெறும் வாணலி யில் தனித்தனியே நன்கு வறுத்தெடுக்கவும்.

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும்… காய்ந்த மிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து வறுத்து,

அனைத்து தானியங்கள் மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியில் நைஸாக பொடிக்கவும்.

இந்தப் பொடியை சூடான சாதத்துடன் சேர்த்து, சிறிது நெய் விட்டு கலந்து சாப்பிடலாம்.
Tags: