முந்திரி பொடி செய்முறை | Cashew Nut Powder !





முந்திரி பொடி செய்முறை | Cashew Nut Powder !

தேவையானவை:

முந்திரி – 20,

பாதாம் – 10,

வெள்ளரி விதை, பொட்டுக் கடலை, கொப்பரைத் துருவல் – தலா கால் கப்,

காய்ந்த மிளகாய் – 6,

பெருங்காயத் தூள் – கால் டீஸ்பூன்,

கறிவேப்பிலை – 2 ஆர்க்கு,

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
முந்திரி பொடி

வெறும் வாணலியில் வெள்ளரி விதை, கொப்பரைத் துருவல் இரண்டையும் தனித்தனியே வறுத்தெடுக்க வும் 

பொட்டுக் கடலையை வாணலி யில் லேசாக ஒரு புரட்டு புரட்டி எடுக்கவும்.

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பெருங்காயம், காய்ந்த மிளகாயை நன்கு வறுக்கவும். 

பிறகு முந்திரி, பாதாமை வறுத்தெடுக்கவும். அதன்பின் கறிவேப்பிலை யையும் வறுத்து எடுக்கவும்.

அனைத்துப் பொருட்களை யும் ஒன்று சேர்த்து, உப்பு போட்டு, மிக்ஸியில் சற்று கொர கொரப்பாக பொடிக்கவும்.

இந்தப் பொடியை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால்… அசத்தலான டேஸ்ட்டில் இருக்கும்.
Tags: