பாசிப்பருப்பு பொரித்த முட்டை குழம்பு செய்முறை / Ingredients of Fried Egg Curry Recipe !

தேவையானவை :

பாசிப்பருப்பு (சிறு பருப்பு) – 100 கிராம்

தக்காளி – ஒன்று

வெங்காயம் – 2

இஞ்சி, பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி

பச்சை மிளகாய் – 2

மிளகாய்த் தூள் – 1/4 மேசைக் கரண்டி

மஞ்சள் தூள் – 1/4 மேசைக் கரண்டி

சீரகத் தூள் – 1/4 மேசைக் கரண்டி

கொத்தமல்லி – சிறிதளவு

முட்டை – 4

மிளகுத் தூள் – 1/4 மேசைக் கரண்டி

உப்பு – தேவைக்கேற்ப

எண்ணெய் – 2 தேக்கரண்டி

கடுகு – 1/4 மேசைக் கரண்டி

காய்ந்த மிளகாய் – 2

நெய் – 2 தேக்கரண்டி

செய்முறை:

பாசிப்பருப்பை சிறு தீயில் 3 நிமிடங்கள் லேசாக சிவக்க வறுத்து எடுக்கவும். 
பாசிப்பருப்பு பொரித்த முட்டை குழம்பு

வெங்காயம், தக்காளி மற்றும் மல்லித் தழையை பொடியாக நறுக்கி வைக்கவும்.

குக்கரில் பாசிப்பருப்பைப் போட்டு தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள், சீரகத் தூள், மிளகாய்த் தூள், இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி, பாதி அளவு வெங்காயம்,

பச்சை மிளகாய் மற்றும் அரை தேக்கரண்டி நெய் சேர்த்து 2 விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

வெந்ததும் பருப்பில் ஒரு டம்ளர் வெந்நீர் சேர்த்து உப்பு சேர்க்கவும்.

ஒரு முட்டையுடன் மீதமுள்ள வெங்காய த்தில் பாதி அளவைச் சேர்த்து, மிளகுத் தூள், உப்பு மற்றும் சிறிதளவு மல்லித் தழை சேர்த்து கலந்து கொள்ளவும்.

ஒரு பவுலில் மற்றொரு முட்டையை அடித்து தனியாக வைக்கவும்.

தோசைக் கல்லில் நெய் விட்டு, வெங்காயம் கலந்த முட்டைக் கலவையை ஊற்றி வேக விட்டு எடுத்து, சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கிள்ளிய காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை

மற்றும் மீதமுள்ள வெங்காயம் தாளித்து, குக்கரில் வேக வைத்த பாசிப்பருப்பில் கொட்டவும்.

வெட்டி வைத்துள்ள முட்டை துண்டுகளை சேர்க்கவும்.

பிறகு தனியாக அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி, மூடி போட்டு சிம்மில் 5 நிமிடங்கள் வைத்திருந்து இறக்கவும்.

சுவையும், மணமும் நிறைந்த பாசிப்பருப்பு பொரித்த முட்டை ரெடி.
Tags: