Recent

featured/random

ராகி சாக்லெட் கேக் ரெசிபி | Ragi Chocolate Cake Recipe !

தேவையானவை: 

கேழ்வரகு மாவு - 35 கிராம் 

கோதுமை மாவு - 35 கிராம் 

வெண்ணெய் - 40 கிராம் 

சர்க்கரை - 65 கிராம் 

பேக்கிங் பவுடர் - கால் டீஸ்பூன் 

கோக்கோ பவுடர் - 1 டேபிள் ஸ்பூன் 

உப்புத் தண்ணீர் - ஒன்றே கால் டீஸ்பூன் 

எண்ணெய் - ஒன்றே கால் டீஸ்பூன் 

சாக்லெட் எசென்ஸ் - 1 டீஸ்பூன் 

முட்டை - 1 

சாக்லெட் துகள்கள் - தேவையான அளவு 

(பார் சாக்லெட்டை வாங்கி துருவி கொள்ளவும். உடைத்துக் கொள்ளவும்) 

செய்முறை: 

கேழ்வரகு மாவு, கோதுமை மாவு, பேக்கிங் பவுடர் மூன்றையும் சேர்த்துக் சலித்து வைத்துக் கொள்ளவும். 
ராகி சாக்லெட் கேக்
ஒரு பாத்திர த்தில் வெண்ணெய் மற்றும் சர்க்கரை யைத் தனியாக எடுத்து சிறிது நேரத்துக்்கு நன்றாகக் கலக்கவும். 

முட்டை சேர்த்து நன்கு அடிக்கவும். இதனுடன் உப்புத் தண்ணீர் மற்றும் எண்ணெயைச் சேர்த்துக் கலக்கி 

உடன் சலித்த மாவுகளை ஒன்றாகச் சேர்த்து நன்றாகப் பொங்கி வரும் வரை கலக்கவும். 

சாக்லெட் எசென்ஸை இதனுடன் ஊற்றி கலக்கி விடவும். இது எல்லா வற்றையும் ரெடி செய்த வுடன் 

கேக் செய்யும் பாத்திர த்தில் ஒரு டீஸ்பூன் அளவு எண்ணெய் தடவி, அதன் மேல் சிறிது கோதுமை மாவு தூவி, 

பாத்திரம் முழுக்கப் பரப்பி விடவும். அதன் மேல் கேக் மாவைக் கொட்டவும். கேக் பாத்திர த்தை லேசாக தரையில் தட்டி சமன் படுத்தவும். 

இதை குக்க‌ரில் வைத்து 25-30 நிமிடம் மிதமான சூட்டில் வேக வைத்து இறக்கி விடவும். 

கேக் ஆறியதும் நாம் ஏற்கெனவே ரெடி செய்து வைத்த க்ரீமை தடவி சாக்லெட் துகள்  களைத் தூவி அழகு படுத்தி பரிமாறவும்.
Tags:

#buttons=(Accept !) #days=(300)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !