எல்லக்கட்டி கோழி பிரியாணி செய்வது எப்படி?

எல்லக்கட்டி கோழி பிரியாணி செய்வது எப்படி?

பிரியாணி என்பது அரிசி, மசாலாப் பொருட்களுடன் முட்டை, மற்றும் ஆடு, மாடு, கோழி இறைச்சி, மீன் அல்லது காய்கறிகள் சேர்த்து சமைக்கும் உணவை குறிக்கும். 
எல்லக்கட்டி கோழி பிரியாணி செய்வது எப்படி?

பொதுவாக, பிரியாணி செய்ய பாசுமதி அரிசியைப் பயன்படுத்துவார்கள். பிரியாணி என்னும் சொல் வறுத்த என்ற பொருள் தரும் beryā என்னும் பாரசீகச் சொல்லில் இருந்து வந்தது. 

காதுகளை பராமரிப்பதில் அலட்சியம் வேண்டாம் !

தமிழ்நாட்டில் பெரும்பாலானவர்கள் சுவைக்காக மட்டுமல்லாமல் சந்தோஷத்துக்காகவும் சாப்பிடும் உணவு, நிறைய பேருக்கு பிடித்தமானது பிரியாணி. 

தமிழ்நாடெங்கும் ஒரு தெருவுக்கு நிச்சயமாக ஒரு பிரியாணி கடையையாவது பார்த்து விட முடியும். தமிழ்நாட்டிலே நவாப்கள் ஆட்சிக் காலத்தில் பிரபலமான ஆம்பூர் பிரியாணியைப் போலவே, 

காஷ்மீரிலிருந்து கன்னியாகுமாரி வரை விதவிதமாக பல்வேறு பிரியாணி வகைகள் இந்தியாவின் சுவை அரும்புகளை மலரச் செய்துள்ளது. 

நாடு முன்னேறுகிறதா, இல்லையா? ஜி.டி.பி என்றால்?

சரி இனி எல்லக்கட்டி கோழி பிரியாணி செய்வது எப்படி? என்று பார்ப்போம்.

தேவையானவை :

எண்ணெய் - 100 மி.லி.,

நெய் - 100 மி.லி.,

சிக்கன் - 300 கிராம்,

பாஸ்மதி அரிசி - 150 கிராம்,

வெங்காயம் - 100 கிராம்,

தக்காளி - 10 கிராம்,

கரம் மசாலாத் தூள் - 2 டீஸ்பூன்,

புதினா - 20 கிராம்,

கொத்த மல்லித் தழை - 20 கிராம்,

தயிர் - 100 மி.லி.,

பச்சை மிளகாய் - 5,

மிளகாய்த் தூள் - 100 கிராம்,

முந்திரி - 50 கிராம்,

இஞ்சி பூண்டு விழுது - 100 கிராம்,

உப்பு - தேவைக்கு,

வாழை இலை - 10.

ஆப்பிள் சிடர் வினிகரின் பயன்கள் பற்றி தெறியுமா?

செய்முறை :
எல்லக்கட்டி கோழி பிரியாணி செய்வது எப்படி?

பாஸ்மதி அரிசியை ஊற வைக்கவும். கடாயில் எண்ணெய் சேர்த்து கரம் மசாலாத் தூள், வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, தக்காளி, புதினா, கொத்த மல்லி சேர்த்து வதக்கவும்.

இதில் மிளகாய்த்தூள், தயிர், சிக்கன், பாஸ்மதி அரிசி சேர்த்து நன்கு கலந்து தம் போடவும்.

பெண்களின் கர்பப்பையை பாதுகாக்கும் கழற்சிக்காயின் பயன்கள் !

பாதி வெந்ததும் மறுபடியும் கலந்து விட்டு வாழை இலை கொண்டு மூடி விட்டு வேக விட்டு எடுக்கவும். 

வறுத்த முந்திரி யால் அலங்கரித்து பரிமாறவும்.

Tags: