தேவையானவை :
சாக்கலேட் லாக் (அ) ரோல் கேக்
முதலில் மைதா மாவு (200 கிராம்),
பேக்கிங் பௌடர் (1 டீ.ஸ்பூன்)
3 முறை சலிக்கவும்.
1 கப் மாவிற்கு ¾ கப் சர்க்கரை,
¾ கப் வெண்ணெய்,
3 முட்டை எடுத்துக் கொள்ளவும்.
தயார் செய்யும் முறை :
சர்க்கரையை தூள் செய்யவும்.
மற்ற பொருட்கள் ரூம் டெம்பரேச்ச ரில் இருக்க வேண்டும்.
பின் மைக்ரோவேவ் ஒவனை, கன்வென்ஷன் மோடில் ப்ரீ-ஹீட் செட் செய்யவும்.
கேக் டின்னை வெண்ணெ யால் க்ரீஷ் செய்து, மைதா மாவை தூவி, பரவலாக தட்டி, மீதிமாவை கீழே கொட்டவும்.
செய்முறை :
முட்டை யின் வெள்ளை கருவை தனியாக எடுத்து, நன்கு பொங்கி வரும் வரை அடிக்கவும்.
எலெக்ட்ரிக் பீட்டர் இல்லை என்றால் சாதாரண முட்டை அடிப்பானை பயன்படுத்த லாம்.
பின் வேறொரு பௌலில் வெண்ணையை க்ரீம் போல் அடிக்கவும்.
பின் சர்க்கரைத் தூளை சேர்த்தடிக் கவும்.
பின் முட்டை யின் மஞ்சள் கருவை சேர்த்தடி க்கவும்.
பின் 1 டீ.ஸ்பூன் வெண்ணிலா எசன்ஃஸ் சேர்த் தடிக்கவும்.
பின் சலித்த மாவை சேர்த்து கரண்டியால் ஒரே புறம் கலக்கவும்.
பின் அடித்த வெள்ளை முட்டையை சேர்த்து கரண்டி யால் ஒரே புறம் கலக்கவும்.
மாவு கெட்டியாக இருந்தால், ¼ கப் பால் சேர்த்து கரண்டியால் ஒரே புறம் கலக்கவும்.
மாவுக் கலவையை கேக் டின்னில் ஊற்றி, ஓவனில் 180 டிகிரி செல்சியஃஸில் 25 நிமிடம் பேக் செய்யவும்.
பேக்கானதை உறுதி செய்ய , ஒரு கத்தியால் கேக்கின் நடுவில் குத்தினால் மாவு ஒட்டாமல் வரும்.
வந்தால் மீண்டும் ஓவனில் 5 நிமிடம் பேக் செய்தெடுக்க வும். பேக் ஆனதும், ஒரு ரேகின் மேல் கேக்கை வைத்து நன்கு ஆற விடவும்.
இது தான் பேசிக் ஸ்பாஞ்ச் கேக்.
இப்பொழுது ஐசிங் செய்வதை பார்க்கலாம்.
கேக்கின் மேல் ஐசிங் செய்ய சில டிப்ஸ்:
சாதாரண மாக கேக் ஆறிய பின்புதான் ஐசிங் போட வேண்டும்.
கேக்கின் மேல் ஐசிங் போடுவதற்கு முன்னால் மேலாக இருக்கும் உதிரித் துகள்களை எடுக்க வேண்டும்.
தூள் இருந்தால் ஐசிங் ஒட்டாது.
கேக்கின் மேல் சர்க்கரைப் பாகு தெளித்து விட்டு, பிறகு ஐசிங் போட வேண்டும்.
ஐசிங் சர்க்கரையைச் சலித்த பின்னரே பயன்படுத்த வேண்டும்.சாதாரண மாக ரோல் கேக் செய்ய ½ இன்ச் கேக்கை எடுத்து கொள்ளவும்.
ரோல் செய்யும் போது கேக் உடையாமல் இருக்க:
ஒரு ஈரத்துணி யின் மேல் கேக்கை வைக்கவும்.
கேக்கின் மேல் ஐசிங் சர்க்கரையை (icing sugar) தூவி விடவும்.
துணியுடன் கேக்கை ரோல் செய்து சிறிது நேரம் வைக்கவும்.
பட்டர் ஐசிங் கலவை செய்ய :
1 கப் ஐசிங் சர்க்கரை
½ கப் வெண்ணை
2 டே.ஸ்பூன் கோகோ பௌடர்
2 டே.ஸ்பூன் உருக்கிய சாக்கலேட் எசன்ஃஸ் தேவைப் பட்டால் முதலில் வெண்ணையை க்ரீம் போல் அடிக்கவும்.
பின் ஐசிங் சர்க்கரை சேர்த்து அடிக்கவும். பின் உருக்கிய சாக்கலேட் சேர்த்து கலக்கவும். பின் கோகோ பௌடர் சேர்த்து கலக்கவும்.
குறிப்பு:
1. வெண்ணைக்கு பதில் விப்பிங்க் க்ரீம் பயன் படுத்தலாம்.
2. விப்பிங்க்ரீமுடன் சாக்கலேட் கலந்து தடவலாம்.
ஐசிங் செய்ய:
ரோல் செத்து வைத்த கேக்கை பிரித்து, சர்க்கரைத் தண்ணீரை நன்கு தெளித்து விடவும்.
க்ரீமை தடவவும்.பின் மெதுவாக கேக்கை ரோல் செய்யவும்.
கேக்கின் ஒரு முனையை வெட்டி, கேக்கின் மேல் மரத்துண்டு போல் வைக்க வும்.
க்ரீமை தடவி ஒரு ஃபோர்கால் லேசாக கீரி விட்டு அலங்கரி கவும்.