பீட்ருட் ஸ்வீட் பன்னீர் ரைஸ் செய்முறை / Beetroot Sweet Paneer Rice Recipe !





பீட்ருட் ஸ்வீட் பன்னீர் ரைஸ் செய்முறை / Beetroot Sweet Paneer Rice Recipe !

உங்கள் சுவையை தூண்டும் பீட்ருட் ஸ்வீட் பன்னீர் ரைஸ் சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை

 பீட்ருட் ஸ்வீட் பன்னீர் ரைஸ்

அனைவரும் விரும்பும் ருசியான பீட்ருட் ஸ்வீட் பன்னீர் ரைஸ் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!

தேவையானவை 

சாதம், துருவிய பன்னீர் - தலா ஒரு கப் 

சர்க்கரை - கால் கப் 
பட்டை - சிறிய துண்டு 

ஏலக்காய் - 4 

கிராம்பு - 2 

நெய் - 4 டேபிள் ஸ்பூன் 

பீட்ரூட் - ஒன்று (துருவியது) 

முந்திரி, பாதாம், திராட்சை - தேவையான அளவு 

செய்முறை :

முதலில் வாணலி யில் நெய்யை சூடாக்கி, முந்திரி, பாதாம், திராட்சையை வறுத்து தனியே எடுத்துக் கொள்ள வேண்டும் .

பிறகு பட்டை, ஏலக்காய், கிராம்பு தாளித்து, துருவிய பீட்ரூட், சர்க்கரை சேர்த்துக் கிளறவும். 

பின் இறுகி வரும் போது சாதம், பன்னீர் சேர்த்துக் கிளறி வறுத்த முந்திரி, திராட்சை, பாதாம் சேர்த்து அலங்கரி த்துப் பரிமாறவும்.
Tags: