ஸீ ஃபுட் கலவை பிரியாணி செய்வது எப்படி?

ஸீ ஃபுட் கலவை பிரியாணி செய்வது எப்படி?

உங்கள் சுவையை தூண்டும் ஸீ ஃபுட் கலவை பிரியாணி சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான ஸீ ஃபுட் கலவை பிரியாணி ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!
ஸீ ஃபுட் கலவை பிரியாணி செய்வது எப்படி?
தேவையானவை 

பாஸ்மதி அரிசி - 1 கிலோ

நண்டு சதை - 150 கிராம்

எண்ணெய் - 100 மில்லி.

குங்குமப்பூ - சிறிதளவு

நெய் - 50 மில்லி

உப்பு - தேவையான அளவு

கிராம்பு - 4

எண்ணெய் - 200

மில்லி ஏலக்காய் - 4

அன்னாசிப் பூ - ஒன்று

பிரிஞ்சி இலை - ஒன்று

மல்லித் தூள் (தனியாத் தூள்) - ஒரு டீஸ்பூன்

சீரகத் தூள் - ஒரு டீஸ்பூன்
தயிர் - 50 மில்லி

வஞ்சிரம் மீன் - 150 கிராம்
ஸ்டெம் செல்களில் இருந்து உயிரணு கரு முட்டைகள் தயாரித்தல் !
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 5

மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன்

தக்காளி - 100 கிராம் (சிறு துண்டு களாக்கவும்)

இறால் - 150 கிராம்

கொத்த மல்லித் தழை - 50 கிராம்

புதினா இலை - 50 கிராம்

எலுமிச்சைப் பழம் - 2 (சாறு எடுக்கவும்)

இஞ்சி - பூண்டு விழுது - 50 கிராம்

பட்டை - 2 . (பொடியாக நறுக்கவும்)

மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 200 கிராம்

கரம் மசாலாத் தூள் - அரை டீஸ்பூன்
கண்கண்ட மூலிகை கண்டங்கத்தரி !
செய்முறை : 
ஸீ ஃபுட் கலவை பிரியாணி
முதலில் மீன், இறால், நண்டை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும் .பின் பாஸ்மதி அரிசியை 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின் அடுப்பில் வாயகன்ற ஒரு பாத்திரத்தை வைத்து நெய் சேர்த்து உருகியதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, பிரிஞ்சி இலை சேர்த்து சிவக்க வறுக்க வேண்டும் .

பின் இத்துடன் ஊற வைத்து தண்ணீர் இறுத்த அரிசி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் வேக வைத்து தனியாக வைக்க வேண்டும் .

பின்னர் ஒரு பாத்திரத்தில் இஞ்சி - பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு மற்றும் மீன், இறால், நண்டின் சதைப் பகுதியை சேர்த்து கலந்து 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும் .

பின் அடுப்பில் வாயகன்ற ஒரு பாத்திர த்தை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிற மாக வதக்கி, தக்காளி சேர்த்து கரையும் வரை வதக்கவும்.
பின்னர் இத்துடன் தயிர் சேர்த்து வதக்கி, சீரகத்தூள், மல்லித் தூள் (தனியாத் தூள்), கரம் மசாலாத் தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

இதில் ஊற வைத்த மீன், இறால் மற்றும் நண்டு, உப்பு, தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் வேக விடவும். இதில் வெந்த சாதத்தை மெதுவாக கலந்து நெய் ஊற்றி கிளறி குங்குமப்பூ, கொத்த மல்லித் தழை, புதினா தூவி மூடவும்.

பிறகு அடுப்பில் ஒரு பெரிய தோசைக் கல்லை வைத்து தீயை முற்றிலும் குறைத்து, இதன் மேல் பிரியாணி பாத்தி ரத்தை வைத்து 10 நிமிடம் ‘தம்’ போட்டு இறக்கிப் பரிமாறவும்.
Tags: