சிவப்பு அவல் பர்ஃபி செய்முறை / Red Rice Flakes Burfi Recipe !





சிவப்பு அவல் பர்ஃபி செய்முறை / Red Rice Flakes Burfi Recipe !

தேவையான பொருட்கள்

சிவப்பு அவல் – 150 கிராம்,

வெல்லம் – 50 கிராம்,

தேங்காய்த் துருவல் – 50 கிராம்,

பால் – 50 மி.லி,

பாதாம், அக்ரூட், பிஸ்தா (நறுக்கியது) – 25 கிராம்,

ஏலக்காய் – 1.

செய்முறை

சிவப்பு அவல் பர்ஃபி
நறுக்கிய வெல்லத்தை ½ கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டிய பிறகு, பாகு பதத்தில் எடுத்துக் கொள்ளவும். 

அதன் பிறகு கடாயில் ஒரு தேக்கரண்டி வெண்ணெய், கழுவிய சிவப்பு அவல், துருவிய தேங்காய், ஏலக்காய், நறுக்கிய பாதாம், அக்ரூட், பிஸ்தா சேர்ந்து கிளறவும்.

கடைசியாக 50 மி.லி பால் சேர்த்து 10 நிமிடம் மிதமான சூட்டில் வைத்து, கடாயை இறக்கிய வுடன் ஒரு தட்டில் வெண்ணெய் தடவி பர்ஃபி கலவையை போட்டு½ மணி நேரம் கழித்து துண்டு களாக வெட்டி குழந்தை களுக்கு மாலை வேளையில் கொடுக்க லாம். 

இதில் எனர்ஜி – 140 Kcal, புரதம் – 2.2 கிராம், மாவுச்சத்து – 22 கிராம், கொழுப்புச்சத்து – 4.9 கிராம் அடங்கி யுள்ளது.
Tags: