அருமையான கல்யாண வீட்டு முட்டைகோஸ் பொறியல் செய்வது எப்படி?





அருமையான கல்யாண வீட்டு முட்டைகோஸ் பொறியல் செய்வது எப்படி?

பச்சை இலைக்காய்கறிகளில் ஒன்றான முட்டைகோஸின் நன்மைகள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் உண்மையில் முட்டைகோஸில் அளவுக்கு அதிகமான நன்மைகள் நிறைந்துள்ளன. 

அருமையான கல்யாண வீட்டு முட்டைகோஸ் பொறியல் செய்வது எப்படி?
மேலும் முட்டைகோஸில் நிறைய வெரைட்டிகள் உள்ளன. அவை வெள்ளை, சிவப்பு, பச்சை மற்றும் ஊதா போன்றவை. இவை அனைத்திலும் நல்ல அளவில் சத்துக்கள் அடங்கியுள்ளன. 

முட்டைகோஸில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருட்களை நிறைய உள்ளன. எனவே இதனை சாப்பிட்டால், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்கள் வளர்வதை முற்றிலும் தடுக்கும். 

மேலும் ஆய்வு ஒன்றிலும், முட்டைகோஸ் சாப்பிட்டால், புற்றுநோய் வளர்வதை தடுக்கலாம் என்று கண்டறியப் பட்டுள்ளது.

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும் !

உடலில் அழற்சி அல்லது உட்காயங்களால் பாதிக்கப் பட்டவர்கள் முட்டைகோஸை சாப்பிட்டால், அதில் உள்ள அமினோ ஆசிட் குளுட்டமைன், அவைகளை குணப்படுத்த பெரிதும் உதவியாக இருக்கும்.

ஹோட்டல் மற்றும் கல்யாண வீடுகளில் கிடைக்கக்கூடிய செம்ம ருசியான முட்டைக்கோஸ் பொரியலை நாம் எப்படி செய்வது என்பதை தற்போது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் 

2 ஸ்பூன் எண்ணெய்

1 டீஸ்பூன் கடுகு 

1 டீஸ்பூன் உளுந்தம் பருப்பு 

2 பச்சை மிளகாய் 

1 வெங்காயம் நறுக்கியது

1 கருவேப்பிலை 

2 டேபிள் ஸ்பூன் ஊறிய பாசி பருப்பு 

கால் கிலோ முட்டைகோஸ் நறுக்கியது

துருவிய தேங்காய் 3 ஸ்பூன் 

அரை டீஸ்பூன் அளவிற்கு உப்பு

செய்முறை: 

முதலில் கடாயை நன்றாக சூடாக்கிக் கொண்டு, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். 

எண்ணெய் நன்றாக சூடான பின்னர், அதில் ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு டீஸ்பூன் உளுத்தம் பருப்பு, கொஞ்சம் கருவேப்பிலை மற்றும் பொடியாக கட் செய்த இரண்டு பச்சை மிளகாய் ஆகிய அனைத்தையும் சேர்த்து நன்றாக நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். 

அதனுடன் ஒரு மீடியம் சைஸ் வெங்காயத்தை பொடியாக நறுக்கி போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு அரை டீஸ்பூன் அளவிற்கு உப்பு சேர்த்து விட்டு நன்றாக வதக்குங்கள். 

உப்பை சேர்த்து வதக்குவதால் வெங்காயமானது சீக்கிரமே வதங்கி விடும். வெங்காயம் நன்றாக வதங்கியப் பின்னர், அதில் அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்த இரண்டு டேபிள் ஸ்பூன் பாசிப்பருப்பை சேர்த்துக் கொள்ளுங்கள். 
காய்ச்சல் வந்தால் முதலுதவி செய்வது எப்படி?
அதன் பின்னர் இதனுடன் ஒரு கால் கிலோ அளவு நன்றாக நறுக்கி வைத்திருந்த முட்டைக்கோஸை போட்டு மெதுவாக வதக்குங்கள். தீயானது குறைவான அளவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். 

முட்டைக்கோஸானது நன்றாக வெள்ளை நிறத்தில் வரும் வரை நன்றாக வதக்குங்கள். அதே நேரத்தில் கோஸானது மிகவும் வெந்தும் விடவும் கூடாது. 

பின்னர் அதனை மூடி போட்டு மூடி ஐந்திலிருந்து எட்டு நிமிடங்கள் வரை நன்றாக வேக விடுங்கள். இப்போது நீங்கள் மூடியை திறந்து பார்த்தீர்கள் என்றால் முட்டைக்கோஸ் நன்றாக வெந்து இருக்கும். 

அதன் பின்னர் அதனுடன் தேங்காய் சேர்த்து நன்றாக கிளறி விட்டு எடுத்தால் தற்போது சூப்பரான கல்யாண வீட்டு முட்டைக்கோஸ் பொரியல் தயார்.. செய்து பாருங்கள்!
Tags: