சத்து மாவு முளைக்கட்டிய பச்சைப்பயறு புட்டு செய்வது எப்படி?





சத்து மாவு முளைக்கட்டிய பச்சைப்பயறு புட்டு செய்வது எப்படி?

முளைகட்டிய உணவில் ஊட்டச்சத்துகள் அதிகம். வைட்டமின் ஏ, பி, சி, கே இவற்றில் ஏராளமாகப் பொதிந்துள்ளன. புரதச்சத்து இவற்றில் அதிகமாக உள்ளது. 
சத்து மாவு முளைக்கட்டிய பச்சைப்பயறு புட்டு செய்வது எப்படி?
நியாசின், தையமின் போன்ற சத்துகளுடன் ஆன்டி ஆக்ஸிடென்டுகளும் இவற்றில் அதிக அளவு உள்ளன. மேலும், ஒமேகா அமிலம், இரும்புச் சத்து, துத்தநாகம் போன்ற சத்துகளும் இவற்றில் நிறைந்து உள்ளன. 

முளைகட்டிய பாசிப்பயறில் அதிகப் புரதச்சத்து இருப்பதால், வளரும் குழந்தைகளுக்கு அது நல்ல ஊட்டச்சத்தைக் கொடுக்கும். சருமப் பளபளப்புக்கு உதவுவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். 

முளைகட்டிய பயறுகள், தானியங்களின் செரிமானம் தாமதப்படும் என்பதால் வயிற்றுக் கோளாறு உள்ளவர்களும் வயதானவர்களும் மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு இவற்றை உட்கொள்ளலாம். 
சரி இனி சத்து மாவு மற்றும் முளைக்கட்டிய பச்சைப்பயறு கொண்டு சத்து மாவு முளைக்கட்டிய பச்சைப்பயறு புட்டு செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :

சத்து மாவு - ஒரு கப்,

தேங்காய்த் துருவல் - கால் கப்,

உப்பு - சிட்டிகை,

முளைக் கட்டிய பச்சைப் பயறு - கால் கப்,

நேந்திரன் பழத் துண்டுகள் - ஒரு கப்.

செய்முறை :
சத்து மாவு முளைக்கட்டிய பச்சைப்பயறு புட்டு செய்வது எப்படி?
வெறும் வாணலியில் சத்து மாவை வாசனை வரும் வரை வறுத்து எடுக்கவும். வறுத்த மாவில் உப்பு, வெது வெதுப்பான தண்ணீர் சேர்த்து உதிரியாக புட்டு மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.

அதனுடன் பயறு சேர்த்து கலக்கவும். கலந்த மாவை இட்லி தட்டில் பரத்தி ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

ருசியான சேலம் மட்டன் குழம்பு செய்வது எப்படி?

அதனுடன் தேங்காய்த் துருவல், நேந்திரன் பழத்துண்டுகள் சேர்த்து கலக்கவும். சத்து மாவு முளைக்கட்டிய பச்சைப்பயறு புட்டு ரெடி. கடலைக் கறியுடன் பரிமாறலாம்.
Tags: