தேவையான பொருட்கள் :
மட்டன் - கால் கிலோ

வெங்காயம் - 1

இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி

தக்காளி பியூரி - கால் கப்

மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி

கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி,

சீரகத் தூள் - ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி - சிறிதளவு,

உப்பு - தேவையான அளவு.

தாளிக்க :

பட்டை, பிரிஞ்சியிலை, ஏலக்காய், லவங்கம் - தலா 2

எண்ணெய் - தேவையான அளவு
இந்திய கேப்டனுக்கு அமெரிக்கா பல மில்லியன் தர முன் வந்ததா?
செய்முறை :
மட்டன் ரோகன் ஜோஷ் செய்வது எப்படி?
கொத்த மல்லி, வெங்காய த்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் 
எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்த பொருட்களை போட்டு தாளித்த பின்னர் 

வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

அடுத்து அதில் மட்டன் சேர்த்து வதக்கி விட்டு வேக தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 8 விசில் வரும் வரை வேக விடவும்.
விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து அதில்  மிளகாய்த் தூள்,  கரம் மசாலா தூள், சீரகத் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும். அடுத்து அதில் தக்காளி பியூரியை சேர்த்து கொதிக்க விடவும். 
மிக்சி வாங்குவதற்கான வழிகாட்டி !
எல்லாம் ஒன்றாக சேர்ந்து கொதித்து வெந்ததும் கொத்த மல்லித் தழை தூவி இறக்கவும். சுவையான மட்டன் ரோகன் ஜோஷ் தயார்.