சுவையான புடலங்காய்ப் புட்டு செய்வது எப்படி?





சுவையான புடலங்காய்ப் புட்டு செய்வது எப்படி?

புடலங்காய் நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளில் ஒன்றாக இருந்தாலும் சிறந்த மருத்துவ குணங்களை கொண்டிருக்கும் காயும் கூட. இது நாட்டுக் காய்களில் ஒன்று. பீர்க்கங்காய், சுரைக்காய், பாகற்காய் போன்று இதுவும் நாட்டுக்காய் தான்.  
புடலங்காய்ப் புட்டு
புடலங்காயின் விதைக்குள் கால்சியம், இரும்பு, மெக்னீசியம், துத்தநாகம், இரும்பு, நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் சத்துகள், கொழுப்புச்சத்து போன்றவற்றை உள்ளடக்கி யுள்ளது. 

புடலங்காய் முற்றீயிருந்தாலும் இளசாக இருந்தாலும் வாங்கி பயன்படுத்தலாம். புடலங்காய் நீர்ச்சத்து அதிகம் கொண்டிருப்பதால் இது உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும் செய்யும். 

உணவு முறையால் தான் மலச்சிக்கல் என்பதை மறுக்க முடியாது. ஆனால் சில குறிப்பிட்ட உணவு வகைகள் மலச்சிக்கல் வராமல் தடுக்க கூடியவை. 

அத்தகை உணவு வகையில் புடலங்காய் சேர்த்து சமைத்த உணவுகள் மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துகொள்ளும்.

தேவையான பொருட்கள்: 

புடலங்காய் – 500 கிராம் 

சின்ன வெங்காயம் – 150 கிராம் 

பூண்டு – 4 பற்கள் 

பச்சை மிளகாய் – 5 

சோம்பு – 1/2 தேக்கரண்டி 

பட்டை – 3 சிறிய துண்டு 

கறிவேப்பிலை – தாளிக்க 

மஞ்சள் பொடி – 1/2 தேக்கரண்டி 

பொட்டுக் கடலை – 50 கிராம் 

எண்ணெய் – 100 மிலி. 

உப்பு – தேவையான அளவு 

செய்முறை: 

புடலங்காயைப் பொடிதாக நறுக்கவும். பொடியாகச் சீவியும் கொள்ளலாம். உப்பு, மஞ்சள் தூள் போட்டுப் பிசறி வைகவும். வாணலி யில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் பட்டை, சோம்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். 

பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும். புடலங்காய் சிறிது தண்ணீர் விட்டி ருக்கும். நன்றாகப் பிழிந்து விட்டு வாணலியில் சேர்த்து வதக்கவும். 

இன்னும் கொஞ்சம் உப்பு சேர்த்துக் கொள்ளவும். வாணலியை மூடி வைக்கவும். தண்ணீர் தெளிக்க வேண்டாம். எண்ணெ யிலேயே வேக வேண்டும். 

வெந்ததும் பொட்டுக் கடலையைப் பொடி செய்து தூவவும்.
Tags: