பிரண்டைப் பொடி செய்முறை !





பிரண்டைப் பொடி செய்முறை !

தேவையான பொருட்கள் :

பிரண்டைத் துண்டுகள் - 10,

கறுப்பு உளுந்து, கடலைப் பருப்பு - தலா ஒரு கப்,

பூண்டு பல் - 10,

தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு,

கறிவேப்பிலை - கைப்பிடியளவு,

காய்ந்த மிளகாய் - 20,

பெருங்காயத் தூள் - சிறிதளவு,

உப்பு - தேவையான அளவு.

செய்முறை : 

பிரண்டைப் பொடி

வெறும் வாணலியில் கறுப்பு உளுந்து, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, மிளகாய், பெருங்காயத் தூள், இஞ்சி ஆகிய வற்றை தனித்தனி யாக சேர்த்து வறுத்து ஆற விடவும்.

அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு பிரண்டைத் துண்டுகள் சேர்த்து வறுத்து எடுக்கவும்.

அனைத்தும் நன்றாக ஆறிய பிறகு வறுத்த பொருட்க ளை ஒன்றாக சேர்த்து மிக்சியில் ஒரு சுற்று அரைக்கவும்.

அதனுடன் உப்பு, பூண்டு சேர்த்து கொர கொரப்பாக அரைத்து எடுத்து காற்று புகாத டப்பாவில் சேகரிக்கவும்.

தேவைப்படும் போது சூடான சாதத்தில் சேர்த்து பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கு நல்லெண்ணெய் சேர்த்து தொட்டுக்கொள்ளலாம்.
Tags: