ஆரஞ்சு ஒரு சுவை மிகுந்த சிட்ரிக் பழமாகும். இதனால் பலரும் ஆரஞ்சு பழத்தை அதிகமாக உண்கின்றனர்.
ஊட்டச்சத்துகள் நிறைந்தது என்கிற காரணத்தினால் அதிகப்படியான அளவில் ஆரஞ்சு பழங்களை எடுத்துக் கொள்கின்றனர்.
குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் கூட மற்ற பழங்களைச் சாப்பிடுவதைக் காட்டிலும் ஆரஞ்சை விரும்பி சாப்பிடுகிறார்கள்.
சரி இனி பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான சுவையான ஆரஞ்சு பிரியாணி ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க.
தேவையானவை
:
எண்ணெய் - 2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
பாஸ்மதி அரிசி - ஒரு கப்
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
புதினா இலைகள் - அரை கைப்பிடி
காஷ்மீரி சில்லி பவுடர் - ஒரு தேக்கரண்டி
கொத்த மல்லித் தழை - ஒரு கைப்பிடி
காரட் - 1 அல்லது 2
வெங்காயம் – 3
ஆரஞ்சு பழம் - 5
உப்பு - தேவைக்கு
செய்முறை :
முதலில் வெங்காயத்தை நீளமாக நறுக்கவும். காரட்டை துருவி வைக்கவும். அரிசியை கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
ஆரஞ்சு பழங்களைப் பிழிந்து
சாறு எடுத்து வைக்கவும். (ஒன்றரை கப் அளவு) குக்கரில் எண்ணெய் ஊற்றி
கரம் மசாலா தூள் போட்டு நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து உப்பு போட்டு வதக்கவும்.
பின்னர் வெங்காயம் வதங்கி யதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
நறுக்கிய புதினா, மல்லி இலைகளை சேர்த்து வதக்கி விட்டு அதனுடன் மிளகாய்த் தூள் சேர்த்து மேலும் வதக்கவும்.
அதன் ஆரஞ்சு ஜூஸை சேர்த்து மூடி வைத்து கொதிக்க வைக்கவும்.
கொதித்ததும் ஊற வைத்த அரிசியை சேர்த்து உப்பு சரி பார்த்து மூடியிட்டு வேக வைக்கவும்.
அரிசி முக்கால் பதம் வெந்ததும் குக்கர் மூடியை திறந்து கிளறி விட்டு துருவிய காரட் சேர்த்து
மீண்டும் குக்கரை மூடி மேலும் 15 நிமிடங்கள் தம்மில் போடவும். பரிமாறவும்