ரைஸ் ஸ்டிக்ஸ் உப்புமா செய்முறை | Rice Sticks Uppuma Recipe !





ரைஸ் ஸ்டிக்ஸ் உப்புமா செய்முறை | Rice Sticks Uppuma Recipe !

ஒரு பாக்கெட்டில் 3 அல்லது 4 bundles இருக்கும். இதை வைத்து சாதாரண உப்புமா, கிச்சடி, கலவை சாதங்கள் செய்வது போலவும் வெரைட்டி சேவை செய்ய லாம். 

ரைஸ் ஸ்டிக்ஸ் உப்புமா

இவற்றை நூடுல்ஸ் போல நீளமா கவோ அல்லது உடைத்து விட்டு நம்ம ஊர் சேமியா போலவோ பயன் படுத்தலாம். 

உடைத்து விடும் போது ஒரு ப்ளாஸ்டிக் கவரில் வைத்து செய்ய வேண்டும். இல்லை யென்றால் சுற்றிலும் சிதறும்.

தேவையானவை:

Rice sticks - ஒரு bundle ல் பாதி

சின்ன வெங்காயம் - 5

விருப்பமான காய்கள் 

பீன்ஸ் - 10,

கேரட் - 1 சிறியது (நான் சேர்த்தது)

பச்சை மிளகாய் - 1

இஞ்சி - சிறு துண்டு

உப்பு - தேவைக்கு

எலுமிச்சை சாறு - சிறிது

கொத்து மல்லி இலை

தாளிக்க:

எண்ணெய்

கடுகு

உளுந்து

கடலைப் பருப்பு

முந்திரி (போட மறந்தாச்சு)

பெருங்காயம்

கறிவேப்பிலை

செய்முறை:

Rice sticks ஐ அது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து ஒரு 20 நிமி வைக்கவும். அப்போது தான் ஊறி சாஃப்டாக இருக்கும்.

பிறகு நீரை வடித்து விட்டு ஒரு இட்லிப் பாத்திர த்தில் இட்லி அவிப்பது போல் அவிக்கவும். 

சீக்கிரமே வெந்து விடும். வெந்ததும் எடுத்து உதிர்த்து விடவும். அல்லது ஊறிய Rice sticks ஐ அப்படியே கூட‌ சேர்க்க லாம்.

இதற்கிடை யில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி இவற்றை நறுக்கி வைக்க வும்.

கேரட், பீன்ஸ் இவற்றை மிக மெல்லிய தாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலை அடுப்பி லேற்றி எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டி யதைத் தாளித்து விட்டு வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும். 

அடுத்து கேரட்,பீன்ஸ் சேர்த்து வதக்கவும்.வதங்கியதும் சிறிது உப்பு சேர்த்து , 

(ஏற்கனவே Rice sticks ல் உப்பு சேர்த்துள் ளோம்) காய் வேக சிறிது தண்ணீர் தெளித்து வேக விடவும்.

காய் வெந்ததும் உதிர்த்து வைத்துள்ள Rice sticks ஐப் போட்டு forks ஐப் பயன் படுத்திக் கிளறி விடவும்.

எல்லாம் கலந்து ரைஸ் ஸ்டிக்ஸ் நன்றாக சூடேறியதும் எலுமிச்சை சாறு விட்டு, கொத்து மல்லி தூவி இறக்கவும்.

தேங்காய் சட்னி, வெஜ் & நான்வெஜ் குருமா தொட்டு சாப்பிட சூப்பராக இருக்கும்.
Tags: