ருசியான கிறிஸ்துமஸ் கப் கேக் செய்வது எப்படி?





ருசியான கிறிஸ்துமஸ் கப் கேக் செய்வது எப்படி?

பலரும் விரும்பிச் சாப்பிடுவதில் சாக்லெட், ஐஸ்கிரீம் ஆகியவற்றுக்கு தனி இடம் உண்டு. அதே போல தான் கப் கேக்கும். 1796-ம் ஆண்டு, அமெரிக்காவைச் சேர்ந்த சமையல் கலைஞர் அமெலியா சைமன்ஸ் என்பவரால் கப் கேக் செய்யும் முறை கண்டறியப்பட்டது. 
ருசியான கிறிஸ்துமஸ் கப் கேக் செய்வது எப்படி?
1828-ல் வெளியான எலிஸா லெஸ்லீஸ் என்ற சமையல் குறிப்புப் புத்தகத்தில் இடம் பெற்ற 75 உணவில் இந்த கப் கேக்கும் ஒன்று. 

19-ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் சின்னச் சின்ன கப்கள் மற்றும் மண்ணால் ஆன பாண்டத்தில் கேக் கலவையை வைத்து அடுப்பில் சுட்டு எடுத்தனர். 

பெர்ரி கேக், பட்டி கேக், கப் கேக் போன்ற பெயர்களில் தயாரிக்கப்பட்ட கப் கேக், பல சுவைகளிலும் செய்யப்பட்டது. சாக்லெட் பிரியர்களின் சந்தோஷத்தை அள்ளும் விதமாக, சாக்லெட் கப் கேக்குகளும் செய்யப்பட்டன.

ஆரம்பத்தில், கப் கேக் என்பதை இரு விதமாக புரிந்து கொண்டனர். அதாவது, கேக் செய்யத் தேவையான மூலப்பொருட்களை, குறிப்பிட்ட கொள்ளளவு உள்ள கப்பினால் அளந்து அளந்து செய்வது முதல் வகை. 

கப் போன்ற சின்னச்சின்ன மண் பாண்டத்தில் மூலப்பொருட்களை நிரப்பி, வெப்பப்படுத்தி எடுப்பது இரண்டாம் வகை.

இந்த (நாளை) வருட கிறிஸ்துமஸ் விழாவைச் சிறப்பான தாக்க வீட்டிலேயே செய்யக் கூடிய ருசியான கிறிஸ்துமஸ் கப் கேக் செய்வது எப்படி? என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் : 

முட்டை – 5 

சர்க்கரை – கால் கிலோ 

வெண்ணெய் – 2 டீஸ்பூன் 

மைதா – 200 கிராம்

பேக்கிங் பவுடர் – முக்கால் டீஸ்பூன் 

வெனிலா எசென்ஸ் – 2 டீஸ்பூன் 

முந்திரி, டூட்டி ஃப்ரூட்டி, கோகோ பவுடர், செர்ரி – சிறிதளவு 

பேப்பர் கப் மோல்டு – தேவையான அளவு 
செய்முறை : 
ருசியான கிறிஸ்துமஸ் கப் கேக் செய்வது எப்படி?
மைதா வுடன் பேக்கிங் பவுடரைச் சேர்த்து 3 முறை நன்றாக சலித்து வைக்கவும். சர்க்கரையைப் பொடித்துக் கொள்ளவும். பொடித்த சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடிக்கவும். 

சலித்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக முட்டைக் கலவையுடன் சேர்த்து கட்டி விழாமல் நன்றாகக் கலந்து மூன்று பங்காகப் பிரித்து வைக்கவும். 

ஒரு பங்குடன் கோகோ பவுடரைக் கலக்கவும். இரண்டாவது பங்குடன் டூட்டி ஃப்ரூட்டீயைக் கலக்கவும். 

மூன்றாவது பங்குடன் செர்ரியைச் சேர்த்துக் கலந்து கொள்ளவும். பேப்பர் கப்பில் வெண்ணெய் தடவி, அதனை மோல்டினுள் வைக்கவும். அதனுள் கலந்து வைத்துள்ள மாவு கலவையை ஊற்றவும். 
மைக்ரோ வேவ் அவனில் 160 டிகிரி வெப்ப நிலையில் 5 முதல் 7 நிமிடங்கள் வரை பேக் செய்யவும். 

7 நிமிடம் ஆனவுடன் சிறிய மரக்குச்சியை வைத்து கேக் வெந்து விட்டதா எனப் பார்த்து, எடுக்கவும். விரும் பினால் கேக் வகைகளின் மேல் ஐசிங்கைப் பரப்பலாம். சூப்பரான கப் கேக் ரெடி.
Tags: