சிக்கன் மஷ்ரூம் வறுவல் செய்முறை / Chicken Mushroom Curry Recipe !





சிக்கன் மஷ்ரூம் வறுவல் செய்முறை / Chicken Mushroom Curry Recipe !

தேவையானவை:

chicken thigh - 2 (or) chicken breast - 1

மஷ்ரூம் - 5 பெரியது

சின்ன வெங்காயம் - 10

தக்காளி - பாதி

பச்சை மிளகாய் - 1

இஞ்சி - ஒரு துண்டு

பூண்டிதழ் - 3

மிளகாய்த் தூள் - 3 டீஸ்பூன்

மஞ்சள்தூள் - சிறிது
உப்பு - தேவைக்கு

புதினா & கொத்து மல்லி

தாளிக்க:

எண்ணெய்

கிராம்பு - 3

பட்டை - 1

பிரிஞ்சி இலை - 1

சீரகம்

செய்முறை:

சிக்கன் மஷ்ரூம் வறுவல்

சிக்கனை விருப்ப மான வடிவத்தில் நறுக்கிக் கழுவீ விட்டு சிறிது தயிர், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் சேர்த்து பிசறி ஒரு 1/2 மணி நேரத்திற்கு ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

இஞ்சி, பூண்டு தட்டி வைக்கவும். மஷ்ரூம், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் இவற்றை நறுக்கி வைக்கவும்.

ஒரு வாணலை அடுப்பி லேற்றி எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டிய வற்றைத் தாளித்து விட்டு இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.

பிறகு வெங்காயம், பச்சை மிளகாய்,தக்காளி, மஷ்ரூம் இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.
இவை நன்றாக வதங்கி யதும் சிக்கனை சேர்த்து வதக்கவும்.

இவை வதங்கி யதும் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கிளறி மூடி வேக விடவும். 

தண்ணீர் சேர்க்க வேண்டாம். சிக்கன், மஷ்ரூம் இவை வேகும் போது வெளி வரும் தண்ணீரே போது மானது.

சிக்கன் நன்றாக வெந்து, தண்ணீர் முழுவதும் வற்றியதும் எலுமிச்சை சாறு விட்டு, புதினா & கொத்து மல்லி தூவி இறக்கவும்.
Tags: