டேஸ்டியான பிரட் சாண்ட்விச் செய்வது எப்படி?

டேஸ்டியான பிரட் சாண்ட்விச் செய்வது எப்படி?

காலையில் அவசரம் அவசரமாகச் சமைப்பது, அதைவிட அவசரமாகச் சாப்பிடுவது என்று காலில் சக்கரம் கட்டிக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறோம். 
டேஸ்டியான பிரட் சாண்ட்விச் செய்வது எப்படி?
அந்த அளவுக்கு வாழ்க்கை பரபரத்துக் கிடக்கிறது. அமர்ந்து சாப்பிடக்கூட யாருக்கும் நேரமில்லை. எது கிடைக்கிறதோ அதுதான் உணவு. 
அப்படிப் பலரும் பயன்படுத்தும் ஓர் உணவுப்பொருள், பிரெட். 

சமைக்க நேரமின்றி ஓடுபவர்கள், உடல்நலம் சரியில்லாமல் வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பவர்கள் எனப் பலருக்கும் பிரெட் மட்டுமே எளிதான உணவு. 

டீசல் காரில் பெட்ரோல்? பெட்ரோல் காரில் டீசல்? என்ன நடக்கும்?

சரி இனி பிரட் கொண்டு டேஸ்டியான பிரட் சாண்ட்விச் செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
தேவையானவை:

பிரட் துண்டுகள் -  ஒரு நபருக்கு 2 துண்டுகள் வீதம்,

வெங்காயம் - (பெரிய வெங்காயம் இல்லை என்பதால் சின்ன வெங்காயம்),

தக்காளி - 1,

வெள்ளரி பிஞ்சு - 1,

விருப்பமான சீஸ் - 3 துண்டுகள்

விருப்பமான ரான்ச் / Ranch - கொஞ்சம்

லெட்யூஸ் / Lettuce - கொஞ்சம்

சிறுநீரகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கங்கள் !

செய்முறை:
டேஸ்டியான பிரட் சாண்ட்விச் செய்வது எப்படி?
வெங்காயம், தக்காளி, வெள்ளரிப் பிஞ்சு இவற்றைக் கழுவித் துடைத்து விட்டு, விருப்பமான அளவில் மெல்லிய வில்லை களாக்கவும்.
லெட்யூஸ் இலைகளையும் நீரில் அலசி விட்டு, ஈரம் போகத் துடைத்து விட்டு நறுக்கிக் கொள்ளவும். இரண்டு ப்ரெட் துண்டுகளை டோஸ்ட் / toast செய்து எடுத்துக் கொள்ளவும். 

அல்லது அப்படியே கூட பயன்படுத்திக் கொள்ளலாம். கடையில் ப்ரெட் துண்டுகளின் அளவுக்கே ( Singles ) சீஸ் கிடைக்கிறது. அதில் ஒன்றை எடுத்து ஒரு பிரட்டின் மேல் வைக்கவும்.

சீஸ் விருப்பமில்லை எனில் விட்டு விடலாம். படத்திலுள்ள சீஸ் சிறிய அளவிலானது. அவற்றை மெல்லிய ஸ்லைஸ்களாக நறுக்கி வைக்கவும்.

அடுத்து தக்காளி ஸ்லைஸை வைக்கவும். அதே போல் வெங்காய ஸ்லைஸையும் வைக்கவும். 

அடுத்து வெள்ளரி பிஞ்சு ஸ்லைஸை வைத்து, இறுதியாக ரான்ச்சையும் சிறிது ஊற்றி, பிரட் துண்டு களை ஒன்றன் மேல் ஒன்று வைத்து லேஸாக‌ அழுத்தவும்.
இப்போது சுவையான, சத்தான, ஃப்ரெஷ்ஷான வெஜ் சாண்ட்விச் சாப்பிடத் தயார்.

கிரெடிட் கார்டு பயன்படுத்த புதிய விதிமுறைகள்... தெரிந்து கொள்ள !

அப்படியே சாப்பிட்டால் உள்ளே உள்ளவை மேலேயும், கீழேயும் வெளியில் வர வாய்ப்புள்ளது. எனவே ஒரு பேப்பர் டவலால் சுருட்டி வைத்துக் கொண்டு சாப்பிடலாம்.
Tags: