இறால் திதிப்பு செய்வது எப்படி?

இறால் திதிப்பு செய்வது எப்படி?

மீன்கள் எப்போதுமே நல்லதுதான் என்றாலும் விரால் மீனுக்கு ஒரு தனிசிறப்பு உண்டு. இந்த மீனை அசைவ பிரியர்கள் வேண்டாம் என்று சொல்லவே மாட்டார்கள். 
இறால் திதிப்பு
அனைத்து அசைவ உணவுகளைவிட, கடல் உணவுகளில் எப்போதுமே சத்துக்கள் அதிகம். காரணம், சாச்சுரேட் கொழுப்பு இந்த மீன்களில் உள்ளதால் உடல் எடையை அதிகரிக்காது. 

இறால் மீனில் உள்ள சத்துக்கள் அபரிமிதமானவை.. கனிமச்சத்தின் அளவு அதிகமாக உள்ளது. ஹீமோகுளோபினில் ஆக்ஸிஜன் கலக்கும் செயலில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த கனிமம்.

கூடுதல் இரும்புச்சத்து உடம்பில் ஏறும் போது, தசைகளுக்கு கூடுதல் அளவிலான ஆக்ஸிஜன் செல்லக்கூடும். 
இறால் மீனை குழந்தைகள் சாப்பிட்டு வந்தால், மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜனின் அளவும் அதிகரித்து ஞாபக சக்தி அதிகரிக்கும். 

இறாலில் அயோடின் சத்து நிறைய உள்ளதால், உடலில் தைராய்டு ஹார்மோன்கள் சுரக்க பேருதவி புரிகின்றன. 

இந்த ஹார்மோன்கள் குழந்தை பருவத்திலும், கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும், மூளையின் வளர்ச்சிக்காக தேவைப்படுகிறது. 

இறாலில் புரதம், கால்சியம், பொட்டாசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளன. பல வகை புற்றுநோய்களில் இருந்து காப்பதுடன், நுரையீரல் புற்றுநோய்க்கு எதிராக போராடும்.
தேவையான பொருட்கள் :

தேங்காய் - 1/4 மூடி 

சோம்பு - 1 டீஸ்பூன் 

பச்சை மிளகாய் - 4 கீறியது 

இறால் - 1/2 கிலோ 

சாம்பார் வெங்காயம் - 1/4 கிலோ (நறுக் கியது) 

நாட்டுத் தக்காளி - 1/4 கிலோ நறுக் கியது 

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் 

தனியாத் தூள் - 2 டீஸ்பூன் 

மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன் 

எண்ணெய் - ஒரு குழிக் கரண்டி 

இஞ்சி, பூண்டு - சிறிதளவு தட்டவும் 

உப்பு - தேவைக் கேற்ப 

சோம்பு, கறிவேப்பிலை - சிறிதளவு (தாளிக்க) 
செய்முறை :

இறாலைச் சுத்தம் செய்யவும். இஞ்சி பூண்டு தாளித்துக் கொள்ளவும். தேங் காய் சோம்பு அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறிது சோம்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். 

வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக வதக்கவும். அரைத்து வைத்த மசாலாவைச் சேர்க்கவும். 
மஞ்சள் தூள், தனியாத் தூள், மிளகாய்த் தூள், தேவைக் கேற்ப உப்பு சேர்க்கவும். மசாலா திக்காக வரும் வரை சிறிது நீர் ஊற்றி கொதிக்க விடவும். 

குருமா பதத்தில் வந்ததும் இறாலைப் போடவும். இறால் வெந்த பிறகு பச்சைக் கொத்த மல்லி இலை, கறிவேப்பிலை சிறிது கிள்ளிப் போட்டு இறக்கவும். குறிப்பு இதே முறைப்படி நெத்திலி திதிப்பும் செய்யலாம்.
Tags: