முள்ளங்கி ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் நிலத்தடி காய்கறிகளுள் ஒன்றாகும். இதில் பல்வேறு வைட்டமின்களும், தாதுக்களும் நிறைந்துள்ளன.
முள்ளங்கி பரோட்டா செய்வது எப்படி?
முள்ளங்கி பல்வேறு வயிறு தொடர்பான சிக்கல்களுக்கும், குடல் நோய்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. 

இது பசியின்மை, காய்ச்சல் மற்றும் தொண்டை வீக்கம் போன்ற பிரச்சினைகளை குணப்படுத்துகிறது. 

முள்ளங்கியில் பல்வேறு வகையான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. 
நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவுகளில் முள்ளங்கியை சேர்த்துக் கொள்ளுவதன் மூலம் உடலுக்கு அதிக அளவில் புரதங்களும், நார்ச்சத்துகளும் கிடைக்கின்றன. 

முள்ளங்கியில் பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மாங்கனீசு மற்றும் ஃபோலேட் போன்ற பல்வேறு வகையான தாதுக்கள் நல்ல அளவில் உள்ளன. 

முள்ளங்கியிலுள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. 

சரி இனி முள்ளங்கி கொண்டு முள்ளங்கி பரோட்டா செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்: 
கோதுமை மாவு - 1/4 கப்; 

முள்ளங்கித் துருவல் ( உப்பு சேர்த்து, தண்ணீரை வடித்து வைத்துக் கொள்ளவும்); 

பொடியாக நறுக்கிய முள்ளங்கிக் கீரை ( நறுக்கி யதும் தண்ணீரை வடித்துக் கொள்ள வும்.) - சிறிது; 

மிளகாய்த் தூள் - 1/2 ஸ்பூன்; 

எண்ணெய் - 1/4 ஸ்பூன்; 

உப்பு -  தேவைக்கேற்ப; 

கரம் மசாலத் தூள் - 2 சிட்டிகை; 

பொடியாக நறுக்கிய பச்சை மிளகய் - காரத்துக் கேற்ப; 

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1/4 கப்; 

ஓமம் - 2 சிட்டிகை; 

எண்ணெய் - தேவைக் கேற்ப. 
செய்முறை : 
முள்ளங்கி பரோட்டா செய்வது எப்படி?
கடைசியாகக் கொடு த்துள்ள எண்ணெய் தவிர்த்து மற்ற எல்லாப் பொருட்களையும் கோதுமை, மாவுடன் சேர்த்துப் பிசையவும். 

வெஜ் குருமாவுடன் சாப்பிட சாஃப்ட் பரோட்டா செய்வது எப்படி?

தேவையானால் மட்டும் சிறிது தண்ணீர் தெளித்துப் பிசையவும். சப்பாத்திக்குத் தேவை யான அளவு உருண்டைகளாக உருட்டி, 

கனமான சப்பாத்தி களாக இட்டு, தோசைக் கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு, வெந்ததும் எடுத்து சூடாகப் பறி மாறவும்.