டேஸ்டியான உருளைக்கிழங்கு தயிர் மசாலா செய்வது எப்படி?

டேஸ்டியான உருளைக்கிழங்கு தயிர் மசாலா செய்வது எப்படி?

தினமும் தயிரை சாப்பிடுவதால், இதயம் வலுப்பெறும். உயர் ரத்த அழுத்தம் ஏற்படாது. தயிரை சாப்பிடுவதால், நோய் எதிர்ப்பு செல்கள் தூண்டப்படும். மேலும் பெண்களுக்கு பிறப்புறுப்பில் வரும் தொற்றுக்களை எதிர்க்கிறது.

டேஸ்டியான உருளைக்கிழங்கு தயிர் மசாலா செய்வது எப்படி?
சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது. பழச்சாறு உடலு‌க்கு‌த் தேவையான வைட்டமின் சி-யை அளிக்கிறது. 

த‌யிரு‌ம் பழ‌‌ச்சாறு‌க்கு இணையான ச‌த்து‌க்களை‌ கொ‌ண்டு‌ள்ளது. தயிர் ரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தக் கூடியது. தொடர்ந்து தயிர் சாப்பிட்டால் உடல் வீக்கம், அரிப்பு, அக்கி போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும். 

தயிர் சாப்பிடுவதன் மூலம் உடலில் கொழுப்பு அதிகமாக சேர்வதால் ரத்தக் குழாயில் அடைப்பு, சர்க்கரை நோய் போன்ற பிரச்சனைகள் உருவாகும். 
இனி உருளைக்கிழங்கு மற்றும் தயிர் பயன்படுத்தி டேஸ்டியான உருளைக்கிழங்கு தயிர் மசாலா செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.
தேவையானப் பொருட்கள்: 

உருளைக்கிழங்கு (பெரிய அளவு) - 2 

பெரிய வெங்காயம் - 1 

மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன் 

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் 

சோம்பு - 1 டீஸ்பூன் 

இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன் 

பச்சை மிளகாய் - 2 

கறிவேப்பிலை - சிறிது 

பச்சை கொத்தமல்லி இலை - சிறிது 

எண்ணை - 2 டேபிள் ஸ்பூன் 

உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு 

தயிர் - 1/2 கப் 
செய்முறை : 
டேஸ்டியான உருளைக்கிழங்கு தயிர் மசாலா செய்வது எப்படி?
உருளைக்கிழங்கை, குக்கரில் போட்டு தேவையான தண்ணீரை விட்டு, 1 அல்லது 2 விசில் வரும் வரை அல்லது கிழங்கு முக்கால் வேக்காடு வேகும் வரை வேக விட்டு எடுக்கவும்.

குக்கர் ஆறியதும், அதை திறந்து, கிழங்கை எடுத்து தோலை உரித்து விட்டு, நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். 

பச்சை மிளகாயை நீளவாக்கில் இரண்டாகக் கீறிக்கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்ததும், சோம்பு, கறிவேப்பிலைச் சேர்க்கவும். 

சோம்பு சற்று பொரிந்ததும், வெங்காயத்தைச் சேர்த்து சற்று வதக்கவும். பின்னர் இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பச்சை வாசனை போனவுடன், உருளைக் கிழங்கு துண்டுகளைச் சேர்த்துக் கிளறி விடவும். 
ஞாபக மறதியை போக்கும் உணவுகள் !
அத்துடன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் சிறிது நீர் (1/4 கப் அளவிற்கு), சிறிது கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்துக் கிளறி மூடி போட்டு, மிதமான தீயில் உருளைக்கிழங்கு மிருதுவாக வேகும் வரை வைத்திருக்கவும். 

பின்னர் அதில் பச்சை மிளகாயைச் சேர்த்துக் கிளறவும். கடைசியில், தயிரை நன்றாகக் கடைந்து விட்டு, கிளறி விடவும். அடுப்பை சிறு தீயில் வைத்து, ஓரிரு வினாடிகள் கிளறி, இறக்கி வைக்கவும். 

சப்பாத்தி, பூரி அல்லது சாதத்தில் சேர்த்தும் சாப்பிடலாம். மைதா பூரியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
Tags: