சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி செய்வது எப்படி?





சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி செய்வது எப்படி?

நிறைய மக்கள் இந்த சீரக சம்பா அரிசியைக் கொண்டு சமைத்து சாப்பிடுவது உண்டு. இந்த அரிசி வகை தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட பழமையான அரிசி ரகமாகும். 

குறிப்பாக இந்த சீரக சம்பா அரிசியை புலாவ், பிரியாணி போன்ற விருந்துகளுக்கு அதிகமாக பயன்படுத்துவது உண்டு. இது கொஞ்சம் விலை உயர்ந்த அரிசி என்றால் கூட சாப்பிட மிகவும் சுவையானது. 

சரி இனி சீரக சம்பா அரிசி பயன்படுத்தி டேஸ்டியான சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  

தேவையானவை : 
சிக்கன் - அரை கிலோ 

சீரக சம்பா அரிசி - 1 கப் 

பெரிய வெங்காயம் - 1 

தக்காளி - 1 

கொத்தமல்லி தழை - 1 கப் 

பச்சை மிளகாய் - 2 

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன் 

மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன் 

மல்லி தூள் - 2 டேபிள் ஸ்பூன் 

உப்பு - தேவை யான அளவு 

எண்ணெய் - தேவை யான அளவு 

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன் 

பட்டை - 2 

கிராம்பு - 2 

ஏலக்காய் - 2 

பிரியாணி இலை - 1 

செய்முறை: 

முதலில் வெங்காய த்தையும் மற்றும் தக்காளி யையும் தனி தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும். 

சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி
பின்பு பச்சை மிளகாய் மற்றும் கொத்த மல்லி தழையும் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.

அரைத்து வைத்த பின்பு ஒரு பாத்தி ரத்தில் சிக்கனுடன் அரைத்து வைத்த வெங்காயம், தக்காளி, கொத்த மல்லி தழை 

மற்றும் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், மல்லி தூள், தயிர், இஞ்சி, பூண்டு பேஸ்ட் எல்லா வற்றையும் சேர்த்து பிசைந்து அரை மணி நேரம் உற வைத்துக் கொள்ளவும். 

பின்பு குக்கரில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, பொருட்களை போட்டு எண்ணெய் சேர்த்து தாளித்த பின்பு அதில் உற வைத்த சிக்கனை போட்டு சிறிது நேரம் வேக விடவும்.

வேக வைத்த பின்பு அதில் அரிசி யையும் போட்டு கிளறி விட்டு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி விட்டு இரண்டு விசில் விட்டு பத்து நிமிடம் சிமிழ் வைத்து இறக் கவும். சிக்கன் பிரியாணி ரெடி. 

குறிப்பு:

(சீரக சம்பா அரிசி ஒரு கப் அரிசி வைத்தால் ஒன்றை கப் தண்ணீர் ஊற்றி னால் போதும் அதிகம் தண்ணீர் ஊற்றி னால் சாதம் குழைந்து விடும்.)
Tags: