சுவையான சாட் மசாலா பொடி செய்வது எப்படி?





சுவையான சாட் மசாலா பொடி செய்வது எப்படி?

பச்சை மாங்காய் பொடியை உணவில் சேர்த்து சாப்பிட்டு வருவதால் நம்முடைய இதயம் முதல் சருமப் பிரச்சினைகள் நிறைய பலன்களைப் பெற முடியும். மாங்காய் எல்லா கால கட்டங்களிலும் கிடைக்காது. 
சுவையான சாட் மசாலா பொடி செய்வது எப்படி?
அதனால் சீசன் சமயங்களில் மாங்காயை வாங்கி, சுத்தம் செய்து அதை பொடி செய்து வைத்து ஸ்டோர் செய்து கொள்ள வேண்டும். இந்த பொடியை அடுத்த சீசன் வரையிலும் கெட்டுப் போகாமல் பார்த்துக் கொள்ள முடியும். 

பச்சை மாங்காயில் விட்டமின் மற்றும் கனிமச் சத்துக்களும் அதிக அளவில் நிறைந்திருக்கின்றன. 

கால்சியம், நார்ச்சத்துகள், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், புரோட்டின், வைட்டமின் ஏ, விட்டமின் சி, விட்டமின் B12, விட்டமின் பி3 0.548, விட்டமின் பி5 ஆகிய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. 

இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைப்பதற்கும் நீரிழிவைக் கட்டுப்படுத்தவும் உலர் மாங்காய் பொடி பயன்படுகிறது.

மாங்காயை உலர்த்திப் பொடி செய்யும் போது அதனுடன் சிறிதளவு மாங்கொழுந்துகளையும் நிழலில் நன்கு உலர்த்திப் பின் பொடி செய்யலாம். 
இது இந்த பொடிக்கும் இன்னும் கொஞ்சம் கூடுதலான சுவையைக் கொடுக்கும். தற்போது சாட் மசாலாவும் மிளகாய் தூள் போல் இன்றியமையாத ஒரு பொடியாக சமையலறையை ஆக்கிரமித்து விட்டது. 

சாலட் தொடங்கி பொரியல் வகை வரை எதிலும் சுவை கூட்ட ஒரு சிட்டிகை தூவினால் போதும் அந்த உணவின் சுவை வேற லெவல் டேஸ்ட் தரும். குறிப்பாக சாட் வகைகளுக்கு இதை அதிகம் பயன்படுத்துவதாலேயே சாட் மசாலா என்று கூறப்படுகிறது. 

அந்த வகையில் இந்த சாட் மசாலாவை கடையில் வாங்குவது தான் உங்கள் வழக்கம் எனில் இனி தேவையில்லை. ஏனெனில் வீட்டிலேயே சுலபமாக செய்யலாம்.
தேவையானவை: 

சீரகம் – கால் டேபிள் ஸ்பூன்

மிளகு – அரை டேபிள் ஸ்பூன்

புதினா – சிறிதளவு

மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

மல்லித்தூள் – 1 டேபிள்ஸ் பூன்

மாங்காய் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்

சுக்கு பொடி – அரை டேபிள் ஸ்பூன்

பெருங்காயம் – அரை டேபிள் ஸ்பூன்

கருப்பு உப்பு (Black Salt) – 1 டேபிள் ஸ்பூன்

உப்பு – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:
சுவையான சாட் மசாலா பொடி செய்வது எப்படி?
முதலில் ஒரு வாணலியில் கால் டேபிள் ஸ்பூன் அளவு சீரகத்தை எடுத்து இரண்டு நிமிடம் நன்றாக வறுக்க வேண்டும். வருத்த சீரகத்தை வேறொரு பாத்திரத்தில் மாற்றி கொள்ளவும்.

பின் அரை டேபிள் ஸ்பூன் அளவு மிளகை 2 நிமிடம் நன்றாக வறுத்து எடுத்து கொள்ள வேண்டும். சிறிதளவு புதினாவை கருப்பு நிறம் வரும் வரை வறுத்து கொள்ள வேண்டும். 

புதினாவை காய வைத்து வறுக்கலாம் அல்லது Fresh-ஆன இலையை வறுத்து கொள்ளலாம். 
இப்பொழுது அடுப்பை அணைத்து விட்டு வாணலியின் சூட்டில் 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் மாங்காய் பவுடர், 1 டேபிள் ஸ்பூன் மல்லித்தூள், 

அரை டேபிள் ஸ்பூன் சுக்கு பொடி, அரை டேபிள் ஸ்பூன் பெருங்காயம்,1 டேபிள் ஸ்பூன் கருப்பு உப்பு (Black Salt), 1 டேபிள் ஸ்பூன் கல் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

மாங்காய் பவுடர் செய்வதற்கு கிளி மூக்கு மாங்காய் எடுத்து அதில் உள்ள தோலை நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வெயிலில் காய வைத்து கொள்ளவும். 

காய வைத்து மாங்காய் துண்டுகளை மிக்ஸியில் போட்டு அரைத்தால் மாங்காய் பவுடர் ரெடி ஆகிவிடும். இப்பொழுது வருத்து வைத்த மிளகு, சீரகம், புதினாவை சூடு ஆறிய பிறகு மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும். 
இப்பொழுது அரைத்து வைத்துள்ள பொடியையும் வாணலியில் இருக்கும் தூள்களையும் ஒன்றாக சேர்த்து கலக்கி கொள்ளவும்.

இதை ஒரு Bottle -ல் வைத்து எப்போது வேண்டுமானாலும் உபயோகப்படுத்தி கொள்ளலாம். இந்த சாட் மசாலா பொடியை நீங்கள் சாட் வகை உணவுகள் செய்யும் போது பயன்படுத்தி கொள்ளலாம்.
Tags: