காய்கறி பொங்கல் செய்வது எப்படி?





காய்கறி பொங்கல் செய்வது எப்படி?

பீ‌ன்‌ஸ் அவரை வகையை‌ச் சே‌ர்‌ந்த ‌பீ‌ன்‌ஸ் ‌நீ‌ரி‌ழிவு ம‌ற்று‌ம் இதய ‌வியா‌தி‌யி‌ன் ‌தீ‌விர‌த்தை க‌ட்டு‌ப்படு‌த்து‌ம் த‌ன்மை கொ‌ண்டதாக உ‌ள்ளது. 
காய்கறி பொங்கல் செய்முறை
தொட‌ர்‌ந்து சோயா‌பீ‌ன்‌ஸ் உணவுகளை‌ச் சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தால் அது கொழு‌ப்பை‌க் குறை‌ப்பதுட‌ன், ர‌த்த‌த்‌தி‌ல் குளு‌க்கோ‌சி‌ன் அளவையு‌ம் க‌ட்டு‌‌க்கு‌ள் வை‌த்‌திரு‌க்‌கிறது என தெ‌ரிய வ‌ந்து‌ள்ளது. 

முள்ளங்கிக் கிழங்கு சிறுநீர் பெருக்கும், குளிர்ச்சியுண்டாக்கும். இலை பசியைத் தூண்டிச் சிறுநீர் பெருக்கித் தாது பலங்கொடுக்கும். 

சமைத்துண்ண அதிமூத்திரம், நீர்தடை, வயிற்று எரிச்சல், ஊதின உடம்பு, குடைச்சல், வாதம், வீக்கம், சுவாசக் காசம், கபநோய், இருமல் ஆகியவை தீரும். முட்டைகோஸை ஜூஸ் போட்டு குடித்தால் அல்சர் குணமாகும். 

உடல் எடையை குறைக்க வேண்டுமெனில் வேக வைத்த முட்டைகோஸ் அல்லது முட்டைகோஸ் சூப் சாப்பிட வேண்டும். முட்டைகோஸில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் இவை செரிமான மண்ட‌லத்தை சீராக இயக்கி மலச்சிக்கல் பிரச்‌சனையை குணமாக்கும்.

தேவையான பொருட்கள் : 

பச்சரிசி - 1 கப் 

பாசிப் பருப்பு - அரை கப் 

காய்கறி (பொடியாக நறுக்கியது) - 1 கப் 

பெரிய வெங்காயம் - 1 

தக்காளி - 1 

கேரட் - 1 

வேக வைத்தப் பச்சைப் பட்டாணி- 1 கப் 

இஞ்சி - 1 துண்டு 

கறிவேப்பிலை - சிறிது 
நெய் - 1 தேக்கரண்டி 

பெருங்காயம் - அரை தேக்கரண்டி 

உப்பு - தேவைக்கு ஏற்ப 

தாளிக்க : 

மிளகு - 1 டீஸ்பூன் 

சீரகம் - 1 டீஸ்பூன் 

பட்டை - துண்டு 

லவங்கம் - 2 

ஏலக்காய் - 1 

நெய் - 2 டேபிள் ஸ்பூன் 

எண்ணெய் - 3 டீஸ்பூன்.

செய்முறை :

அரிசி, பருப்பை ஒன்றாக அலம்பி ஆறரை கப் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் சேர்த்து சிறு தீயில் நன்கு வேக விடுங்கள். பாதியளவு வெந்ததும் நெய், பெருங்காயம், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து வேக விடுங்கள். 

வெங்காயம், தக்காளி, இஞ்சி போன்ற வற்றைப் பொடியாக நறுக்கி கொள்ளவும். கடாயில் நெய், எண்ணெயை ஊற்றி சூடானதும் மிளகு, சீரகம், பட்டை, லவங்கம், ஏலக்காய், தாளித்த பின் 

வெங்காயம், இஞ்சி சேர்த்து சிறிது வதக்கிய பின் காய்கறிக் கலவையைச் சேருங்கள். அடுத்து அதில் சிறிது உப்பும் சேர்த்து நன்கு வதங்கி யதும் தக்காளி சேருங்கள். 

2 நிமிடம் வதக்கி காய்கள் வெந்ததும் பொங்கலில் சேர்த்து நன்கு கிளறுங்கள். கமகம காய்கறிப் பொங்கல் தயார்.
Tags: