அருமையான ப்ரூட் பகளாபாத் செய்வது எப்படி?

அருமையான ப்ரூட் பகளாபாத் செய்வது எப்படி?

மாதுளம் பழத்தில் வைட்டமின் சி, கே, இரும்பு சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், புரதசத்து ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளது. இந்த பழத்தில் உள்ள பருப்புகள் தனி சிறப்பும், பல்வேறு நோய் தீர்க்கும் ஆற்றல் கொண்டுள்ளது. 
அருமையான ப்ரூட் பகளாபாத் செய்வது எப்படி?
இதய சம்பந்தமான நோய்கள், பித்தம், வாதம், கபம், இருமல், சீதபேதி, இரத்த பேதி, குடற்புண், அஜீரணம், வீக்கத்தால் ஏற்படும் வலியை குறைத்திடும், சீரான இரத்த ஓட்டம், வயிற்றுக்கடுப்பு, வைரஸ் தொற்று வராமல் தடுக்கவும், 

தொண்டை கரகரப்பு, நுரையீரல் சார்ந்த பிரச்சனைகளுக்கு, ஆண்மை அதிகரிக்கவும், குழந்தைகளுக்கு வயிற்றில் உள்ள தட்டைப் பூச்சிகள் வெளியேற்றுவது, போன்ற பல்வேறு வியாதிகளுக்கு மிக சிறந்த நிவாரணியாக செயல்படுவதாக கூறப்படுகிறது. 

கருவளரும், குழந்தை ஆரோக்கியமாகவும் அழகாகவும் சுகப்பிரசவத்துடன் பிறக்க அதிக வாய்ப்புண்டு. 

45-50 வயது எட்டும் போது மெனோபாஸ் காலங்களில் ஈஸ்ட்ரோஜெனின் உற்பத்தி குறைந்து எலும்பு தேய்மானம், மூட்டுவலி போன்றவை ஆரம்பிக்கும். 

மெனோபாஸ் நெருங்கும் காலத்தில் தினமும் மாதுளம் ஜூஸ் குடித்தால் இந்த பிரச்சனைகளை சமாளிக்க பெரிதும் உதவும்.

தேவையானவை:

பச்சரிசி – 2 கப்,

பால் – அரை கப்,

புளிப்பில்லாத புதிய கெட்டித் தயிர் – இரண்டரை கப்,

இஞ்சி – பச்சை மிளகாய் விழுது – 2 டீஸ்பூன்,

வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்,

பெருங்காயத் தூள் – கால் டீஸ்பூன்,

பொடியாக நறுக்கிய கொத்த மல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு,

கடுகு – ஒரு டீஸ்பூன்,

பொடியாக நறுக்கிய முந்திரி – 2 டேபிள் ஸ்பூன்,

காய்ந்த மிளகாய் – 3,

மாதுளை முத்துக்கள் – ஒரு கப்,

பச்சை திராட்சை – 20,

எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:

பச்சரிசியை நன்கு குழைய வேகவிடவும். சாதம் சூடாக இருக்கும் போதே அதனுடன் உப்பு, வெண்ணெய், பெருங்காயத் தூள், இஞ்சி – பச்சை மிளகாய் விழுது, பால், கறிவேப்பிலை, கொத்த மல்லி ஆகிய வற்றைச் சேர்த்துக் கலக்கவும். 

வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், முந்திரி ஆகியவற்றை தாளித்து சாதத்தில் சேர்க்கவும். அத்துடன் கெட்டித் தயிர் சேர்த்து நன்கு கலக்கவும். 

கடைசியாக, மாதுளை முத்துக்கள், பச்சை திராட்சை சேர்த்து நன்கு கிளறவும். இதை டிபன் பாக்ஸில் போட்டு லஞ்சுக்கு கொடுத்து அனுப்பலாம்.
Tags: