சுவையான பீன்ஸ் கோதுமை அடை செய்வது எப்படி?

தினசரி மூன்று வேளைகளும் உணவாக உட்கொள்ளத் தக்க தானிய வகைகளில் கோதுமை பிரதான இடத்தை வகிக்கிறது. 
சுவையான பீன்ஸ் கோதுமை அடை செய்வது எப்படி?

கோதுமையில் செலினியம் என்கிற மூலப் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. இந்த செலினியம் மனிதர்களின் சரும ஆரோக்கியத்திற்கு இன்றியமையாததாக இருக்கிறது. 

தவிடு நீக்கப்படாத கோதுமையை உணவாகக் சாப்பிடுபவர்களுக்கு செலினியத்தில் அதிகம் நிறைந்திருக்கும் ஆன்டி - ஆக்ஸிடன்ட் சத்துக்கள் 

உடலில் உள்வாங்கப்பட்டு தோலை தளர்ந்து விடாமல் தடுத்து, தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் செய்து இளமையான தோற்றத்தை தருகிறது. 

கோதுமையில் நார்ச்சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. கோதுமையில் ஜிங்க் சத்து அதிகம் உள்ளது. 

இந்த ஜிங்க் சத்து தலைமுடிக்கு பலம் தந்து, தலைமுடி அடர்த்தியாக வளர உதவுகிறது. மேலும் தலைமுடிக்கு பளப்பளப்பு தன்மையையும் தருகிறது. 

சரி இனி பீன்ஸ் கோதுமை கொண்டு சுவையான பீன்ஸ் கோதுமை அடை செய்வது எப்படி? என்று பார்ப்போம். 

தேவையான பொருட்கள்:

பீன்ஸ் - கால் கிலோ

வெங்காயம் - இரண்டு

வெங்காய தாள் - இரண்டு

கோதுமை மாவு - இரண்டு கப்

கரம் மசாலா - இரண்டு டேபிள் ஸ்பூன்

உளுந்தம் பருப்பு - ஐந்து தேகரண்டி

கடலை பருப்பு - ஐந்து தேகரண்டி

இட்லி மாவு - இரண்டு கரண்டி

மிளகாய் தூள் - இரண்டு தேகரண்டி

உப்பு - தேவைகேற்ப

எண்ணெய் - தேவையான அளவு

சுவையான மீல்மேக்கர் பிரியாணி செய்வது எப்படி?

செய்முறை :

சுவையான பீன்ஸ் கோதுமை அடை செய்வது எப்படி?

பீன்ஸ், வெங்காயத்தாள், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். பீன்சை ஆவியில் வேக வைத்து கொள்ளவும்.

சுவையான மெக்ஸிகன் ரைஸ் செய்வது எப்படி?

ஒரு பாத்திரத்தில் தோசை மாவு, கோதுமை மாவு, சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வதக்கிய பின்,

வேக வைத்த பீன்ஸ், வெங்காயம், வெங்காய தாள் சேர்த்து நன்றாக வதக்கவும்.

அடுத்து அதில் மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்றாக வதக்கிய பின்னர் அதை கோதுமை மாவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். 

24 வயதில் இ-காமர்ஸில் கலக்கும் குமரி ஷாப்பி !

அடுப்பில் தவாவை வைத்து மாவை அடை போல் ஊற்றி எண்ணெய் சுற்றி ஊற்றி இருபுறமும் வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும். பீன்ஸ் கோதுமை அடை ரெடி.

Tags:

#buttons=(Accept !) #days=(300)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !