குழந்தைகளுக்கு பிடித்த வெஜ் சாண்ட்விச் செய்வது எப்படி?





குழந்தைகளுக்கு பிடித்த வெஜ் சாண்ட்விச் செய்வது எப்படி?

உடல் நிலை சரியில்லை என்றால் அனைவரும் முதலில் பரிந்துரைப்பது பிரெட் தான். அதேபோல் காலை உணவிற்காக பிரெட் டோஸ்ட், பிரெட் ஆம்லெட், பிரெட் ஜாம் என சாப்பிடுவார்கள். 
வெஜ் சாண்ட்விச் செய்வது
வீட்டில் எதுவுமில்லை பசியை போக்க வேண்டுமெனில் பிரெட் இருந்தால் உடனே டோஸ்ட் செய்து சாப்பிடுவது என பிரெட் பல வீடுகளில் பல வகைகளில் உதவுகிறது. 

இந்த பிரெட்டில் எப்படி வெஜ் சாண்ட்விச் செய்வது என்று பார்ப்போம்.

தேவையானவை:

சால்ட் பிரெட் ஸ்லைஸ் – 10,

கேரட் துருவல், கோஸ் துருவல் (இரண்டும் சேர்த்து) – ஒரு கப்,

வெங்காயம், குடமிளகாய், தக்காளி – தலா ஒன்று,

வெண்ணெய் – 100 கிராம்,

புதினா – சின்ன கட்டு (சுத்தம் செய்து கொள்ளவும்),

பொடியாக நறுக்கிய கொத்த மல்லித் தழை – சிறிதளவு,

இஞ்சி விழுது – ஒரு டீஸ்பூன்,

எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும். குடமிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கவும், 

வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி, குடமிளகாய், கேரட் துருவல், கோஸ் துருவல் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

புதினாவை லேசாக வதக்கி மிக்ஸியில் அரைத்து அதனுடன் வெண்ணெய், இஞ்சி விழுது சேர்த்து நன்கு குழைத்து, பிரெட் துண்டின் மேல் பரவலாகத் தடவவும். 

அதன் மேல் வதக்கிய காய்களை பரவலாக வைத்து, மல்லித் தழைத் தூவி மேலே ஒரு பிரெட் ஸ்லைஸ் வைத்து டோஸ்டரில் டோஸ்ட் செய்யவும் (தவாவில் சூடு படுத்தியும் தயார் செய்யலாம்).
Tags: