தவிர்க்கக் கூடாதது காலை உணவு என்பதை மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள். அதிலும் காலை உணவில் கண்டிப்பாக ஒரு சத்தான ஆகாரமும் சேர்ந்திருக்க வேண்டியது அவசியம்.
அதற்கு முட்டையைச் சேர்த்துக் கொண்டால் போதும். நம் உடலுக்கான முழு ஆற்றலுக்கும் உத்தரவாதம். முட்டை உணவுகள் எளிதில் செய்துவிடக் கூடியவை.
உலகளவில் பல நூறு ஆண்டுகளாக மனிதர்கள் சாப்பிடும் சத்தான உணவுகளில் ஒன்று முட்டை. நிறையப் பேருக்குப் பிடித்த உணவும் கூட.
இதில் உடலுக்குத் தேவையான நிறைய சத்துகள் அடங்கியுள்ளன. இந்த முட்டையை கொண்டு சீஸ் வெஜிடபிள் ஆம்லெட் செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
தேவையானவை:
மைதா மாவு – அரை கப்,
துருவிய பன்னீர் – 50 கிராம்,
பால் – அரை கப்,
பச்சை மிளகாய் – 2, வெங்காயம்,
குடமிள காய் – தலா ஒன்று,
கேரட் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்,
சீஸ் துருவல் – ஒரு டேபிள் ஸ்பூன்,
தக்காளி சாஸ் – தேவையான அளவு,
மிளகுத்தூள் – கால் டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய கொத்த மல்லித் தழை – சிறிதளவு,
நெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
பச்சை மிளகாய், வெங்காயம், குடமிளகாயை மிகவும் பொடியாக நறுக்கவும். மைதாவை பாலில் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கலக்கவும்.
இதனுடன் துருவிய பன்னீர், உப்பு, மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய், குடமிளகாய், கொத்த மல்லித் தழை, கேரட் துருவல், சீஸ் துருவல் ஆகிய வற்றை கலந்து வைக்கவும்.
தோசைக் கல்லில் நெய் தடவி மைதா – பன்னீர் கலவையை சற்று கனமாக ஊற்றி மேலும் சிறிது நெய் விட்டு, அதன் மீது காய்கறி – சீஸ் கலவையை தூவி ஒரு மூடி போட்டு வேக விடவும்.
வெந்ததும் அதன் மீது தக்காளி சாஸை லேசாக தடவி, சாப் பிடக் கொடுக்கவும்.