தேவையானவை:

உருளைக் கிழங்கு – 2,

ஏதாவது ஒரு பிஸ்கட் – ஒரு பாக்கெட்,

கிரீன் சட்னி, ஸ்வீட் சட்னி, சாட் மசாலா பொடி – தலா ஒரு டீஸ்பூன்,

பொடியாக நறுக்கிய வெங்காயம் – தேவையான அளவு,

கேரட் துருவல் – சிறிதளவு,

ஓமப்பொடி (ஸ்நாக் வகை) – கால் கப்,

உப்பு, எலுமிச்சைச் சாறு – தேவையான அளவு.

செய்முறை:

பிஸ்கட் சாட்

உருளைக் கிழங்கை வேக வைத்து தோல் உரித்து துண்டு களாக்கி வைக்கவும்.

ஒரு தட்டில் உருளைக் கிழங்கு துண்டுகள், ஒன்றி ரண்டாக பொடித்த பிஸ்கட் துண்டுகள், 

கிரீன் சட்னி, ஸ்வீட் சட்னி, சாட் மசாலா பொடி, நறுக்கிய வெங்காயம், கேரட் துருவல், ஓமப் பொடி, உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து பரிமாறவும்.