உடல் உஷ்ணத்தை நீக்கும் இளநீர் ஆப்பம் செய்வது எப்படி?





உடல் உஷ்ணத்தை நீக்கும் இளநீர் ஆப்பம் செய்வது எப்படி?

இளநீர் என்பது வெயில் காலம் மட்டுமன்றி அனைத்து பருவ நிலைகளிலும் மக்கள் அருந்துகின்றனர். இயற்கை வழங்கிய அற்புத கொடை இளநீர் என்று கூறலாம். 
உடல் உஷ்ணத்தை நீக்கும் இளநீர் ஆப்பம் செய்வது எப்படி?
இளநீர் குடிப்பது, உடலில் வறட்சி, சருமப் பாதிப்புகள் ஏற்படாமலிருக்க உதவும். இளநீரில் சரியான திரவங்கள் உள்ளது என்பதால் உடலை வரட்சியடையாமல் தடுக்கிறது. இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது. 

இளநீர் சுவையானது என்பதுடன் கூடவே மிக மிக ஆரோக்கியமானது.  இயற்கையாகவே இளநீரில் பொட்டாசியம், மாக்னீசியம் போன்ற எலக்ட்ரோலைட்ஸ் நிறைந்துள்ளதால், இது நமது செரிமானத்திற்கு உதவியாக இருக்கும்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ருசித்து சாப்பிடும் இளநீர் ஆப்பம் செய்வது குறித்து பார்க்கலாம். 

உடல் உஷ்ணத்தை நீக்கும் இளநீர், குழந்தைகளுக்கும், முதியவர் களுக்கும் சிறந்த டானிக். சோடியம், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து என தாதுப் பொருட்கள் அடங்கி யுள்ளது.

சரும பிரச்னைக்கும் நல்ல தீர்வாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :

பச்சரிசி - 1 கப்

புழுங்கல் அரிசி - 1 கப்

உளுந்து - கால் கப்

இளநீர் - 1 கப்

ஈஸ்ட் - ஒரு ஸ்பூன்

பால் - சிறிதளவு

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை :

முதலில் பச்சரிசி மற்றும் புழுங்கல் அரிசி, உளுந்து சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு இதனுடன் இளநீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் அரைத்து, உப்பு சேர்த்துக் கரைக்கவும்.

ஆப்பம் சுடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு ஈஸ்ட்டை மிதமான பாலில் கலந்து, 10 நிமிடம் கழித்து மாவுக் கலவையில் சேர்க்கவும்.
பின்னர், அப்பச்சட்டியில் எண்ணெய் விட்டு ஆப்பங்களாக சுட்டு எடுக்கவும். சுவையான் இளநீர் ஆப்பம் ரெடி.
Tags: