சிறுதானிய இடியாப்பம் | Millets idiyappam ! சிறுதானிய இடியாப்பம் | Millets idiyappam ! - ESamayal

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

சிறுதானிய இடியாப்பம் | Millets idiyappam !

தேவையானவை:

சாமை அரிசி - ஒரு குவளை,

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

சிறுதானிய இடியாப்பம்

சாமை அரிசியை 2 மணி நேரம் நன்றாக ஊற விடவும். ஊறிய அரிசியை நன்கு மிருதுவாக, சிறிது உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

மாவு கெட்டியாக இருப்பது நல்லது. உடனே இந்த மாவை இட்லித் தட்டில், இட்லி போல நன்கு வேக விடவும்.

பிறகு  இதனை, இடியாப்ப அச்சில் பிழிந்து எடுக்கவும்.

பலன்கள்: சாமையில் நார்ச் சத்து அதிகம் உள்ளது. குறிப்பாக சர்க்கரை நோயாளி களுக்கு நல்லது.

சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். எண்ணெய் சேர்க்காமல், நீராவியில் வேகவைப்பதால், உடலுக்கு நன்மை பயக்கும்.