மட்டன் சூப் களில் நிறைய ஸ்டைல்கள் உள்ளன. அதிலும் தமிழ் நாட்டிலேயே பலவாறு மட்டன் சூப்பை சமைக்கலாம். 

சுவையான மார்கண்டம் சூப் செய்வது எப்படி?

ஒவ்வொரு ஸ்டைலும் ஒவ்வொரு ருசியைத் தரும். அவற்றில் ஒன்று தான் மார்கண்டம் சூப். 

இது நன்கு சுவையோடு சமைக்கும் போது வீடே கமகமக்கும் வகையில் இருக்கும். இப்போது எப்படி மார்கண்டம் சூப் செய்வதென்று பார்ப்போமா !

இனி முதுகுவலி உங்களை வாட்டுகிறதா? இனி குட் பை  சொல்லுங்கள் !

தேவையான பொருட்கள்:

மட்டன் எலும்பு (நெஞ்செலும்பு) - கால் கிலோ

தக்காளி - 200 கிராம்

மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி

மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி

வெங்காயம் - 200 கிராம்

பச்சை மிளகாய் - 4 பொடியாக நறுக்கியது

மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

அரைக்க தேவையான பொருட்கள்:

சீரகம் - 1 தேக்கரண்டி

தனியா - ஒரு கைப்பிடி அளவு

ஆட்டுக்கால் பாயா கிரேவி செய்வது எப்படி?

செய்முறை:

சுவையான மார்கண்டம் சூப் செய்வது எப்படி?

நெஞ்செலும்பை நன்கு சுத்தம் செய்து வைக்கவும். குக்கரில் சிறிது எண்ணை ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி இவற்றை சேர்த்து நன்றாக  வதக்கவும்.

பின் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து தொடர்ந்து எலுமிச்சை சாறு  சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

குஜராத்தி சிக்கன் குழம்பு செய்வது எப்படி?

இப்போது நெஞ்செலும்பு மற்றும் பொடி செய்த தனியாவை சேர்த்து, நான்கு டம்ளர் நீர் ஊற்றி நன்றாக வேகவிட்டு இறக்கினால் சுவையான மார்கண்டம் சூப் ரெடி.