சுவையான உருளைக்கிழங்கு சமோசா செய்வது எப்படி?

சுவையான உருளைக்கிழங்கு சமோசா செய்வது எப்படி?

உருளைக் கிழங்கில் வைட்டமின் சி, பொட்டாசியம் உள்ளது. உருளையை தோலுடன் உண்பதனால் நார்சத்து உடம்பில் சேருகிறது. 
சுவையான உருளைக்கிழங்கு சமோசா செய்வது எப்படி?
மற்ற காய்கறியுடன் ஒப்பிடும் போது குறைவான கலோரிகளை உடைய சத்து மிகுந்தது. இதனை வறுத்து உண்பதைவிட வேக வைத்து உண்பதே நல்லது. 

உருளைக் கிழங்கில் உள்ள மாவுச்சத்து, அடிவயிறு மற்றும் இரைப்பைகளில் உள்ள குழாய்கள் வீங்குவதையும் அவற்றில் நச்சுநீர் தேங்குவதையும் முன் கூட்டியே தடுத்து உடலுக்கு நன்மை செய்கிறது. 

பச்சை உருளைக்கிழங்கை அரைத்து எடுத்த பேஸ்ட்டை தேனுடன் கலந்து சருமத்தில் தடவினால் சருமம் மிளிரும். மேலும் இது பரு மற்றும் சரும புள்ளிகளை குணப்படுத்த உதவும். 
சரி இனி உருளைக்கிழங்கு கொண்டு சுவையான உருளைக்கிழங்கு சமோசா செய்வது எப்படி? என்று பார்ப்போம். 
தேவையான பொருட்கள் :

மைதா மாவு - 200 கிராம்

உருளைக்கிழங்கு - 2

வெங்காயம் - 2

சீரகம் - ஒரு தேக்கரண்டி

மிளகாய்த் தூள் - தேவைக்கேற்ப

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு
செய்முறை :
சுவையான உருளைக்கிழங்கு சமோசா செய்வது எப்படி?
உருளைக் கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காய த்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும். வாணலி யில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

பிறகு உருளைக் கிழங்கைச் சேர்த்து மிளகாய்த் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி மசாலா வைத் தயார் செய்து வைக்கவும்.

மைதா மாவில் உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு பிசைந்து, சப்பாத்தி க்கு திரட்டுவது போல் திரட்டி அரை வட்டங் களாக வெட்டிக் கொள்ளவும்.
வெட்டிய துண்டில் ஒன்றை எடுத்து, அதன் ஒரு பாதி விளிம்பில் தண்ணீர் தொட்டுக் கொண்டு, மறுபாதி விளிம் பின் மேல் வைத்து ஒட்டி கூம்பு போல் செய்து கொள்ளவும். 

அதனுள்ளே தயாரித்த உருளைக் கிழங்கு மசாலா சிறிது வைத்து ஓரங் களில் தண்ணீர் தடவி ஒட்டி விடவும். இதே போல் மீதமுள்ள மாவிலும் மசாலாவை வைத்து சமோசா செய்து வைக்கவும். 
ஒரு அடிகன மாக கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள சமோசாவை போட்டு பொரித் தெடுக்கவும். சுவையான உருளைக் கிழங்கு சமோசா தயார்.
Tags: