புழுங்கல் அரிசி அடை செய்வது எப்படி?





புழுங்கல் அரிசி அடை செய்வது எப்படி?

இந்தியாவில் சரிபாதி மக்களின் அன்றாட உணவு அரிசி தானியம் கொண்டே செய்யப்படுகிறது. அரிசியில் பல வகைகள் உண்டு. 
புழுங்கல் அரிசி அடை செய்வது எப்படி?
அதில் எந்த ஒரு வகை அரிசியையும் சிறிது நேரம் நீரில் ஊற வைத்து, பிறகு வேக வைத்து செயற்கையாக தயாரிக்கபடும் அரிசி வகை தான் புழுங்கல் அரிசி. 

இந்த புழுங்கல் அரிசியை சாப்பிடுவதால் நமக்கு பல வகையான நன்மைகள் உள்ளது. நமது உடல்நிலை சிறப்பாக இருக்கவும், அனைத்து உறுப்புகளும் சீராக இயங்கவும் உடலுக்கு தாதுக்கள், இரும்பு சத்து, வைட்டமின் சத்து, 

பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள் போன்றவை அத்தியாவசிய தேவையாகும் இத்தகைய சத்துகள் அனைத்தும் புழுங்கல் அரிசியில் நிறைந்துள்ளது. 

வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை புழுங்கல் அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கின்றது.
தேவையான பொருள்கள் :
இட்லி புழுங்கல் அரிசி - 200 கிராம்

துவரம் பருப்பு - 125 கிராம்

கடலைப்பருப்பு - 50 கிராம்

LG பெருங்காய் பொடி - 1 சிறிய ஸ்பூன்

சிவப்பு மிளகாய் வற்ற்ல் - 8 எண்ணிக்கை

பச்சை மிளகாய் - 1 அல்லது 2 தோல் நீக்கி

இஞ்சி - 1 சிறிய துண்டு

கருவேப்பிலை - 1 ஆர்க் [10-15 இலைகள்]

உப்பு - 1 அல்லது 2 சிறிய ஸ்பூன்
செய்முறை :
புழுங்கல் அரிசி அடை செய்வது
புழுங்கல் அரிசி + பருப்புகள் மட்டும் 3 மணி நேரம் தண்ணீரில் ஊறிய பிறகு, தண்ணீரை நன்கு வடிகட்டி விட்டு,

மற்ற எல்லாப் பொருட்களையும் அதனுடன் சேர்த்து மிக்ஸியில் போட்டு ஒரே தடவையாகவோ அல்லது பிரித்து வைத்து இரண்டு தடவையாகவோ அரைத்துக் கொள்ளலாம். 

அதிகமாக ஓட ஓடத் தண்ணீர் ஊற்றாமல் கெட்டி யாகவே அரைக்கணும். ஊறிய அரிசியும் பருப்பும் முழுசு முழுசாக இல்லாமல் அரை பட்டால் போதும். இட்லி தோசை மாவு போல மையாக அரைபட தேவையில்லை. 

கவனிக்க அடை அரைக்கும் போது சற்று கரகரப்பாக அரைத்தால் தான் சூப்பராக வரும். மிக்சியில் அரைத்ததும் ரொம்ப மையாக ஆகி விடும்,

அப்படி ஆகாமல் இருக்க ஒரு பகுதி லேசாக திரித்தது போல் இரண்டு சுற்று சுற்றி எடுத்து விட்டு மீதியை எப்போதும் அரைப்பது போல் அரைக் கலாம்.

உயர் ரத்த அழுத்தம் ஏற்படுத்தும் பாதிப்புகள் !

மையாக இல்லை. முக்கால் பதம். அரைக்கும் போதே பருப்பு வகைகள் சீக்கிரம் அரை பட்டு விடும். கலக்கும் போது ஒரே சீராக ஆகிடும். இதில் சிவப்பு மிளகாயை குறைத்து கொண்டேன். 
இஞ்சியின் அளவை கூட்டி கொண்டேன். பச்ச மிளகாய் ஒன்று சேர்த்தேன். எப்போதும் அடை செய்யும் போது பெரும்பாலும் இஞ்சி பச்ச மிளகாய் தான் சேர்ப்பேன். 

சிவப்பு மிளகாய் சேர்ப்பதாக இருந்தால் ஒன்றிரண்டு தான் சேர்ப்பது. இதில் சிவப்பு மிளகாய், பச்ச மிளகாய், இஞ்சி சேருவதால் காரமும் கொஞ்சம் சுள்ளுன்னு இருக்கும்.
Tags: