சூப்பரான இறால் பார்பிகியு செய்வது எப்படி?





சூப்பரான இறால் பார்பிகியு செய்வது எப்படி?

இறால் மீனில் உள்ள சத்துக்கள் அபரிமிதமானவை.. கனிமச்சத்தின் அளவு அதிகமாக உள்ளது. ஹீமோ குளோபினில் ஆக்ஸிஜன் கலக்கும் செயலில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த கனிமம்.
சூப்பரான இறால் பார்பிகியு செய்வது எப்படி?
அதிக சத்து: கூடுதல் இரும்புச்சத்து உடம்பில் ஏறும் போது, தசைகளுக்கு கூடுதல் அளவிலான ஆக்ஸிஜன் செல்லக்கூடும். இறால் மீனை குழந்தைகள் சாப்பிட்டு வந்தால், மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜனின் அளவும் அதிகரித்து ஞாபக சக்தி அதிகரிக்கும். 

இறாலில் அயோடின் சத்து நிறைய உள்ளதால், உடலில் தைராய்டு ஹார்மோன்கள் சுரக்க பேருதவி புரிகின்றன. 

இந்த ஹார்மோன்கள் குழந்தை பருவத்திலும், கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும், மூளையின் வளர்ச்சிக்காக தேவைப்படுகிறது. 
இறாலில் புரதம், கால்சியம், பொட்டாசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளன. பல வகை புற்றுநோய்களில் இருந்து காப்பதுடன், நுரையீரல் புற்றுநோய்க்கு எதிராக போராடும்.

தேவையான பொருள்கள் :

பெரிய இறால் - அரைகிலோ

மிளகாய் தூள் - தேக்கரண்டி

உப்பு - முக்கால் தேக்கரண்டி

இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒன்னறை தேக்கரண்டி

லெமன் - ஜுஸ் ஒரு பழம்

ஆச்சி கபாப் மசாலா - ஒரு தேக்கரண்டி

நல்லெண்ணை - இரண்டு மேசைகரண்டி

பார்பிகியு ஸ்டிக் - தேவையான அளவு

செய்முறை
இறால் பார்பிகியு - Prawn BBQ
பார்பிகியு ஸ்டிக்கை தண்ணீரில் ஊற வைக்கவும். இறாலை நன்கு சுத்தம் செய்து முதுகில் வயிற்றில் உள்ள அழுக்கு களை எடுத்து விட்டு நன்கு கழுவி தண்ணீரை வடிக்கவும்.

மேலே கொடுக்கப் பட்டுள்ள மசாலா க்களை இறாலில் தடவி அரை மணி நேரம் மேரினேட் பண்ணவும்.

ஊற வைத்த பார்பிகியு ஸ்டிக்கில் மேரினேட் செய்த இறாலை இடைவெளி விட்டு சொருகி இரண்டு புறமும் 10, 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
இது எலக்ரிக் பார்பிகியு அடுப்பில் செய்தது 20 நிமிடத்தில் தயாரா கிடும். இந்த அடுப்பை பயன் படுத்தும் விதம் இதன் அடியில் மார்க் செய்துள்ள கோடு வரை தண்ணீரை நிறப்பவும்.

மேலே உள்ள கம்ம்பியில் பட்டர் தடவி சொருகி வைத்துள்ள கம்பியை வைத்து இருபுறமு பார்பிகியு செய்யவும். 

சூட்டின் அளவை கூட்டலாம் குறைக்கலாம். சுவையான இறால் பார்பிகியு 65 ரெடி. இதற்கு சைட் டிஷ் அவகோடா பாதாம் ஹமூஸ் அண்ட் சாலட்
Tags: