இனிப்பான மங்களூர் போண்டா செய்வது எப்படி?





இனிப்பான மங்களூர் போண்டா செய்வது எப்படி?

கர்நாடகத்தில் ஒருசில ஸ்நாக்ஸ் மிகவும் பிரபலமானது. அதில் மங்களூர் பஜ்ஜி, மங்களூர் போண்டா போன்றவை குறிப்பிடத் தக்கவை.
 மங்களூர் போண்டா
இங்கு அவற்றில் இனிப்பான மங்களூர் போண்டாவை எப்படி செய்வ தென்று கொடுக்கப் பட்டுள்ளது.
அவற்றைப் படித்து பார்த்து, மாலையில் குழந்தை களுக்கு செய்து கொடுங்கள்.

இது குழந்தை களுக்கு மிகவும் பிடித்தமான ஸ்நாக்ஸாக இருக்கும்.

தேவையான பொருட்கள்: 
மைதா - 1 கப்

சர்க்கரை - 1/2 கப்

தயிர் - 1 1/2 கப்

பேக்கிங் சோடா - 1 சிட்டிகை

உப்பு - 1 சிட்டிகை

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் மைதாவைப் போட்டு, அதில் பேக்கிங் சோடா, உப்பு, சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் தயிர் சேர்த்து ஓரளவு போண்டா மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
கொழுப்புக் கட்டியால் பிரச்சனை வருமா?
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,

பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு போண்டாக் களாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், இனிப்பான மங்களூர் போண்டா ரெடி!
Tags: