சாக்லெட் ஸ்பாஞ்ச் கேக் செய்வது எப்படி?





சாக்லெட் ஸ்பாஞ்ச் கேக் செய்வது எப்படி?

சாக்லெட்களில் உடலுக்கு நன்மை செய்யக்கூடிய ஆன்டி ஆக்சிடெண்டுகள் மிகவும் அதிகமாக நிறைந்துள்ளன. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடல் ஆற்றல் அதிகரிக்கும். 
சாக்லெட் ஸ்பாஞ்ச் கேக் செய்வது எப்படி?
விளையாட்டு  வீரர்களின் டயட்டில் கட்டாயம் டார்க் சாக்லெட் இடம் பெற்றிருக்கும். டார்க் சாக்லெட்கள் சாப்பிட்டால் மூளைக்கு நல்லது. 

குழந்தைகள் முதல் இளைய தலைமுறையினர் வரை அவர்களது ஞாபகத்திறன் அதிகரிக்கும். உங்கள் சருமம் நீர்ச்சத்தை இழந்து வறண்டு போகாமல் பாதுகாக்கிறது. முகப்பருக்களையும் தடுக்கிறது. 

தந்தையர் தினம் நெருங்கிக் கொண்டி ருக்கிறது. இந்த தந்தையர் தினத் தன்று உங்கள் தந்தைக்கு ஆச்சரியம் கொடுக்க நினைத்தால், அவருக்கு உங்கள் கையாலேயே கேக் செய்து கொடுங்கள்.

அதிலும் சாக்லெட் ஸ்பாஞ்ச் கேக் செய்து கொடுங்கள். இது மிகவும் ஈஸியான செய் முறையை கொண்டிரு ப்பதுடன், மென்மை யாகவும் இருக்கும்.
இங்கு தந்தையர் தின ஸ்பெஷ லாக சாக்லெட் ஸ்பாஞ்ச் கேக் ரெசிபி யின் செய்முறை கொடுக்கப் பட்டுள்ளது. அதைப் படித்து உங்கள் தந்தைக்கு கேக் செய்து கொடுத்து அவரை அசத்துங்கள்.
தேவையான பொருட்கள்:

மைதா - 1/2 கப்

பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்

புளித்த தயிர் - 2 டேபிள் ஸ்பூன்

கொக்கோ பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்

சர்க்கரை - 1/2 கப் (பொடி செய்தது)

வென்னிலா எசன்ஸ் - 1/2 டீஸ்பூன்

வெண்ணெய் - 1/4 கப் (உருக வைத்தது)

தண்ணீர் - 1/4 கப் 
செய்முறை:
சாக்லெட் ஸ்பாஞ்ச் கேக் செய்வது எப்படி?
முதலில் பேக்கிங் சோடாவை, புளித்த தயிரில் சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் மைதா வில் கொக்கோ பவுடரை போட்டு கலந்து தனி யாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பௌலில் தண்ணீர் ஊற்றி, மைக்ரோ ஓவனில் வைத்து 1 நிமிடம் சூடேற்றி இறக்க வேண்டும்.

பிறகு அதில் சர்க்கரை மற்றும் உருக்கி வைத்து ள்ள வெண்ணெய் சேர்த்து கட்டிகள் சேராத வாறு கிளறி விட வேண்டும். 
அடுத்து அதில் மைதா கலவை, தயிர் கலவை மற்றும் வென்னிலா எசன்ஸ் ஆகியவ ற்றை மெதுவாக சேர்த்து மென்மை யாக கிளறி விட வேண்டும்.
இறுதி யில் பேக்கிங் ட்ரேயில் எண்ணெய் தடவி, பின் கிளறி வைத் துள்ள மாவை ஊற்றி, மைக்ரோ ஓவனில் வைத்து 4 நிமிடம் பேக் செய்து இறக்கி, 10 நிமிடம் கழித்து பரிமா றினால், சாக்லெட் ஸ்பாஞ்ச் கேக் ரெடி
Tags: