மசாலா சப்பாத்தி செய்வது | Spicychappatti Recipe !





மசாலா சப்பாத்தி செய்வது | Spicychappatti Recipe !

தேவையான பொருள்கள் : -

கோதுமை மாவு - 2 கப்,

தயிர் - 1/2 கப்,

பால் - 1/2 கப்,

சீரகத் தூள் - 1/4 டீஸ்பூன்,

உப்பு - தேவைக்கு,

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,

ஆம்சூர் தூள்(காய்ந்த மாங்காய் தூள்) - 1/2 டீஸ்பூன்,

கரம்மசாலா தூள் - 1/4 டீஸ்பூன்,

பெரிய வெங்காயம் நறுக்கியது - 1,

கொத்தமல்லித்தழை - 1 டேபிள்ஸ்பூன்,

கஸ்தூரிமேத்தி - 1/4 டீஸ்பூன்,

எண்ணெய் - 5 டீஸ்பூன்.

செய்முறை : -
மசாலா சப்பாத்தி


கோதுமை மாவு, சீரகத்தூள், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், ஆம்சூர் தூள், கரம்மசாலா தூள், வெங்காயம், கொத்த மல்லித் தழை, கஸ்தூரிமேத்தி சேர்த்து நன்றாக கலக்கவும். 
தயிர், பால், எண்ணெய் ஒன்றாக மாவுடன் சேர்த்து மிருதுவான சப்பாத்தி மாவு போன்று பிசையவும்.

எலுமிச்சைப் பழம் அளவு உருண்டையாக உருட்டி எடுத்து, மெல்லியதான வட்ட சப்பாத்திக ளாக பரத்தி சூடான சப்பாத்திக் கல்லில் இரண்டு பக்கம் வேக வைத்து 

எண்ணெய் சுற்றி ஊற்றி எடுக்கவும். சூடாக சப்ஜி, ஊறுகாய் அல்லது தயிருடன் பரிமாறவும்.
Tags: