தேவையான பொருட்கள் :

கொழுப்பு நிறைந்த பால் - 1 லிட்டர்

கண்டென்ஸ்டு மில்க் - 1/2 கப்

சர்க்கரை - 1/2 கப்

ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்

பாதாம் - 1/4 கப்

முந்திரி - 1/4 கப்

பிஸ்தா - 1/4 கப்

குங்குமப்பூ - 1 சிட்டிகை

செய்முறை :
பாஸந்தி
பாதாம், பிஸ்தா, முந்திரியை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பாலை காய்ச்சி பிறகு, சர்க்கரை மற்றும் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து கொதிக்க விட வேண்டும். 

கலவையானது நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது, தீயை குறைத்து, தொடர்ந்து கைவிடாமல் கிளறி கொண்டே இருக்க வேண்டும்.

அப்படி தீயைக் குறைத்து கொதிக்கவிடும் போது, அதில் பாலாடை உருவாக ஆரம்பிக்கும். அந்த பாலாடையை அப்படியே தொடர்ந்து பால் ஓரளவு கெட்டியாகும் வரை கிளறி விட வேண்டும்.

பால் நன்கு கெட்டியானதும், அதனை இறக்கி, அதில் ஏலக்காய் பொடி, நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தா, குங்குமப்பூ சேர்த்து நன்கு கிளறி, ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஃப்ரிட்ஜில் குளிர வைத்து எடுத்தால் பாசுந்தி ரெடி.