தேவையான பொருட்கள் :

ஓட்ஸ் - ஒரு கப்

சீனி - முக்கால் கப்

நெய் - அரை கப்

ஏலக்காய் பொடி - அரை தேக்கரண்டி

காய்ச்சிய பால் - ஒரு கப்

கேசரி கலர் - தேவைக்கேற்ப

விரும்பிய நட்ஸ் - சிறிது

செய்முறை :
ஓட்ஸ் கேசரி

தேவையான அனைத்தையும் தயாராக வைக்கவும். கடாயில் ஓட்ஸைப் போட்டு வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.

அத்துடன் பாலை ஊற்றி நன்கு கிளறி விட்டு வேக விடவும். வெந்ததும் கேசரி கலர் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்துக் கிளறவும். 

பிறகு அதனுடன் நெய் சேர்த்துக் கிளறவும். கடைசியாக சர்க்கரையைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். 

அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து பாத்திரத்தில் ஒட்டாத பதத்திற்கு வந்ததும், நெய்யில் வறுத்த நட்ஸ் தூவி இறக்கவும்.

சுலபமாகச் செய்யக் கூடிய, சுவையான ஓட்ஸ் கேசரி தயார்.