மிக்ஸ்டு வெஜிடபிள் கட்லெட் செய்வது எப்படி?





மிக்ஸ்டு வெஜிடபிள் கட்லெட் செய்வது எப்படி?

தேவையான பொருள்கள் : -
துருவிய கேரட் - அரை கப்,

பொடியாக நறுக்கிய பீன்ஸ் - அரை கப்,

கோஸ் - அரை கப்,

உருளைக்கிழங்கு - 4,

நறுக்கிய வெங்காயம் - கால் கப்,

மைதா மாவு - ஒரு கப்,

சோள மாவு - அரை கப்,

இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,

கிராம்பு, பட்டை - சிறிதளவு,

கசகசா, சோம்பு - தலா ஒரு டீஸ்பூன்,

பிரெட் தூள் - கால் கப்,

எண்ணெய், உப்பு - தேவையான அளவு. 
செய்முறை : - 
மிக்ஸ்டு வெஜிடபிள் கட்லெட் செய்வது எப்படி?
உருளைக் கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும். கிராம்பு, பட்டை, கசகசா, சோம்பு இவற்றைப் பொடித்துக் கொள்ளவும். 
கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். பிறகு, இஞ்சி - பூண்டு விழுதை சேர்த்து வதக்கி,

துருவிய கேரட், பீன்ஸ், கோஸ் போட்டு, பொடித்து வைத்த பொடியை சேர்க்கவும்.

இதனுடன் மசித்த உருளைக் கிழங்கு, சோள மாவு, உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு பிசைந்து, விரும்பிய வடிவத்தில் செய்து கொள்ளவும். 
மைதா மாவை கரைத்து அதில் கட்லெட்டை தோய்த்து, பிரெட் தூளில் புரட்டவும்.

மூளை வளர்ச்சிக்கு மிக முக்கியமானது கைக்குத்தல் அரிசி !

கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கட்லெட்களை போட்டு பொரித்தெடுக்கவும்.
Tags: