கீமா மட்டன் உருண்டை கறி செய்வது எப்படி?

கீமா மட்டன் உருண்டை கறி செய்வது எப்படி?

இஸ்லாமியர்களின் புனித பண்டிகைகளில் ஒன்றான ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. 
கீமா மட்டன் உருண்டை கறி செய்வது எப்படி?
இந்நாளில் தொழுகை, புத்தாடை மட்டுமல்லாமல் சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும் உலகில் பரப்பும் நோக்கில் 

இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளிலே உணவு தயாரித்து உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வழங்குவர். 
இந்த ரமலான் பண்டிகையை மேலும் சிறப்பாக்க சுவையான கீமா மட்டன் உருண்டை கறி ரெசிபி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!
தேவையானபொருள்கள்

மட்டன் கீமா - 1/2 கிலோ

மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

பட்டை - சிறுதுண்டு சோம்பு,

கச கசா - 1 டீஸ்பூன்

பட்டாணி - 1/2 கப்

உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
அரைக்க

தேங்காய் துருவல் - 1/2 மூடி

வெங்காயம் - 1 நறுக்கியது

வத்தல் மிளகாய் - 4

மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

செய்முறை
கீமா மட்டன் உருண்டை கறி செய்வது எப்படி?
மேற்கண்ட பொருட்களை வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வதக்கி அரைக்கவும். கொத்தின கறியை நன்கு சுத்தம் செய்து வேக வைக்கவும்.
வெந்த கறியுடன் லேசாக உப்பு சேர்த்து பட்டை, சோம்பு, கசகசா, மிளகாய்தூள் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்.

கறியுடன் மசால் கலவை ஒன்றானவுடன் சிறிய எலுமிச்சம்பழ அளவில் அந்த கலவையை ஒவ்வொன்றாக உருட்டி தனியே வைக்கவும்.
குழம்பிற்கு அரைத்த மசாலாவுடன் பட்டாணி, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து வேகவைக்கவும்

குழம்பு கொதித்து வரும் போது செய்து வைத்த உருண்டைகளை ஒவ்வொன்றாகப் போடவும்.
ஆண்களை விட பெண்களுக்கு தூக்கம் அவசியம் !
தேவைக்கேற்ப கெட்டியான பதத்தில் குழம்பு வரும் போது இறக்கி விடவும். இப்போது சுவையான கீமா மட்டன் உருண்டை கறி தயார்.
Tags: