வெஜ் ரைத்தா செய்முறை / Veg Raitha !

வெஜ் ரைத்தா செய்முறை / Veg Raitha !

தேவையான பொருட்கள்

பீட்ரூட்,கேரட், வெள்ளரிக்காய் - தலா ஒன்று

பச்சை மிளகாய் - 2
புதினா - ஒரு கொத்து

சர்க்கரை - 1/4 டீஸ்பூன்

தயிர் - 1 கப்
சீரகத் தூள் - 1 டீஸ்பூன்

கருப்பு உப்பு - தேவைக்கேற்ப

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை
வெஜ் ரைதா
கேரட், பீட்ரூட், வெள்ளரிக்காய் துருவவும் அல்லது பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

விதை நீக்கிய பச்சை மிளகாய் (அல்லது) ஒரு சிட்டிகை காஷ்மீரி மிளகாய்த் தூள் பயன்படுத்தவும்.
ஒரு பாத்திரத்தில் துருவிய காய்கறிகள், புதினா இலை, பச்சை மிளகாய் (அல்லது) சில்லி தூள், சர்க்கரை, கருப்பு உப்பு, உப்பு, தயிர், சீரகத் தூள் சேர்த்து நன்றாக கலந்து புலாவுடன் பர்மாறவும்.
Tags: